Published:Updated:

``எங்கள் தந்தையின் ஆசை..!" - மசூதிக்கு 2.1 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய இந்து சகோதரிகள்!

இந்து - முஸ்லிம் ( சித்தரிப்புப் படம் )

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து சகோதரிகள் இருவர், ரூ.1.2 கோடி மதிப்பிலான நிலத்தை மசூதிக்கு நன்கொடையாக வழங்கி, இறந்துபோன தங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

``எங்கள் தந்தையின் ஆசை..!" - மசூதிக்கு 2.1 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய இந்து சகோதரிகள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து சகோதரிகள் இருவர், ரூ.1.2 கோடி மதிப்பிலான நிலத்தை மசூதிக்கு நன்கொடையாக வழங்கி, இறந்துபோன தங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.

Published:Updated:
இந்து - முஸ்லிம் ( சித்தரிப்புப் படம் )

இஸ்லாமிய ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகையை, நேற்று இந்தியா முழுவதிலும் உள்ள முஸ்லிம் சமூகத்தினருடன் இந்துக்களும் கொண்டாடி தங்களின் மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். இஸ்லாமியர்களின் புனித நாளான இந்த ரம்ஜானில், இந்து-முஸ்லிம் நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து சகோதரிகள் இருவர், ரூ.1.2 கோடி மதிப்பிலான தங்கள் நிலத்தை மசூதிக்கு நன்கொடையாக வழங்கி, இறந்துபோன தங்கள் தந்தையின் கனவை நிறைவேற்றியிருக்கின்றனர்.

2003-ல் இறந்துபோன லாலா பிரஜ்நந்தன் ரஸ்தோகி எனும் விவசாயி, காஷிபூரில் தனக்கென சில ஏக்கர் நிலத்தை வைத்திருந்தார். அவரின் இறப்புக்குப் பின்னர் அந்த நிலத்தின் ஒரு பகுதி, அவரின் மகள்களான அனிதா, சரோஜ் ஆகியோருக்குச் சென்றது. இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த நிலத்தின் ஒருபகுதியை, முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்கள் தந்தை கொடுக்க விரும்பியதை, உறவினர்களின் மூலம் அனிதாவும், சரோஜும் அறிந்திருக்கின்றனர்.

ரம்ஜான்
ரம்ஜான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதையடுத்து, தங்கள் தந்தையின் ஆசையை நிறைவேற்ற முடிவுசெய்த சகோதரிகள் இருவரும், தங்கள் சகோதரன் ராகேஷ் உதவியுடன் அந்த நிலத்தை மாற்றுவதற்கான வேலைக்காக ஞாயிற்றுக்கிழமை காஷிபூர் வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து அனிதாவும், சரோஜும் ரம்ஜானுக்கு முந்தைய நாளில், காஷிபூரில் உள்ள மசூதி ஒன்றுக்கு, ரூ.1.2 கோடி மதிப்பிலான தங்களின் 2.1 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் சகோதர, சகோதரிகளின் அன்பையும் பெற்றுள்ளனர்.

``எங்கள் தந்தையின் ஆசை..!" - மசூதிக்கு 2.1 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கிய இந்து சகோதரிகள்!

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பேசிய அந்த மசூதி கமிட்டியின் தலைவர் ஹசீன் கான், ``லாலா மிகப்பெரிய இதயம் கொண்டவர். அவர் உயிருடன் இருந்தபோது, எல்லா முக்கிய நிகழ்வுகளின்போதும், முதல் நன்கொடையை லாலாவிடம்தான் கமிட்டி எடுக்கும். அவர் இறந்தபிறகு, அவரின் மகன் அதைப் பின்தொடர்கிறார். லாலாவும் என் தந்தையும் சுமார் 50 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவருமே இப்போது இல்லை, ஆனால் அவர்களது சகோதரத்துவ நம்பிக்கை எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது" எனக் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism