Published:Updated:

அன்லாக் 5.0: `அக்டோபர் 15; தியேட்டர்கள் திறக்க அனுமதி!' - மத்திய அரசின் புதிய தளர்வுகள் என்னென்ன?

தியேட்டர் | Theatres
தியேட்டர் | Theatres

நாடு முழுவதும் அன்லாக் 5.0 என்ற பெயரில் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கும் நோக்கில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்துவருகிறது. அதன்படி, அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் 50 சதவிகிதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகள், மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருகிறது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகம் அளிக்கும்.

லாக்டௌன்
லாக்டௌன்

பள்ளிகள், பயிற்சி நிறுவனங்களைத் திறப்பது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம். பள்ளிக்கு மாணவர்கள் வரும் விவகாரத்தில் பெற்றோர்களின் ஒப்புதல் அவசியம்.

`பள்ளிகள் திறப்பு அரசாணை நிறுத்திவைப்பு!’ - அக்டோபர்  31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையிலான போக்குவரத்தைத் தடை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கும் மத்திய அரசு, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு விதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டிருக்கிறது. பொழுதுபோக்குப் பூங்காக்களை அக்டோபர் 15-க்குப் பிறகு திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.

லாக்டௌன்
லாக்டௌன்
AP| Mahesh Kumar A

வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய நீச்சல்குளங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு திறந்துள்ளலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வழங்கும். மாநிலத்துக்குள்ளேயும், மாநிலங்களுக்கு இடையேயும் போக்குவரத்துக்கு இ-பாஸ், இ-பெர்மிட் போன்றவை தேவையில்லை.

அடுத்த கட்டுரைக்கு