Published:Updated:

`மனதையும் கைகளையும் பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள்!' -தனிமைப்படுத்தலில் மகேஷ் பூபதி, லாரா தத்தா

mahesh boopathy - lara dutta
mahesh boopathy - lara dutta ( www.instagram.com/mbhupathi/ )

``ஒன்பதாம் நாள் வீட்டில் இருந்தவாறே உடற்பயிற்சி செய்கிறேன். சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் கவனமுடன் இருப்போம்.''

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்குநாள் தீவிரம் அடைந்து வருகிறது. நாட்டில் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் அரசு மூலமாக அவரவர் வீடுகளில் குவாரன்டைன் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இந்த ஊரடங்கை எதிர்கொள்வதில் திணறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி ஒரு வீடியோவை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

mahesh boopathy
mahesh boopathy
www.instagram.com/mbhupathi/

அந்த வீடியோவில், மகேஷ் பூபதியும் அவர் மனைவி லாரா தத்தாவும் காணப்படுகிறார்கள். தற்போதைய சூழலில் அறிவுறுத்தப்படும் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை கடைப்பிடித்து, வீட்டைவிட்டு வெளியேறாது தங்களை எவ்வாறு பிஸியாக வைத்துக்கொள்கிறார்கள் என ரசிகர்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

வீடியோவில், மகேஷ் பூபதி உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார். அப்போது மகேஷின் செல்லப்பிராணி நாய், அவர் செய்யும் உடற்பயிற்சிகளை அருகிலிருந்து பார்க்கிறது. லாரா தத்தா ஸ்கிப்பிங் பயிற்சி செய்கிறார். தொடர்ந்து, அவர்களின் குடும்ப நண்பரான அனுஷ்கா ஷர்மா, தன் கணவருடன் இவர்களின் உடற்பயிற்சி நிமிடங்களில் கலந்துகொள்கிறார். மேலும், இவர்கள் அனைவரும் பிஸிக்கல் டிஸ்டன்ஸிங்கில் இருப்பதற்காக ஒருவரை விட்டு ஒருவர் குறிப்பிட்ட இடைவெளியில் இருக்கிறார்கள்.

மகேஷ் பூபதி இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, `ஒன்பதாம் நாள் வீட்டில் இருந்தவாறே உடற்பயிற்சி செய்கிறேன். சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் கவனமுடன் இருப்போம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

`மக்கள் வரமாட்டார்கள்; வெளியில் சொல்லலாமா?' - #Corona சர்ச்சையில் கேரள  மருத்துவமனை

மகேஷ் பூபதியின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள லாரா தத்தா, `இந்தக் கடினமான சூழலை இலகுவாக எதிர்கொள்வதற்காக நம் மனங்களை வெறுமையுடன் வைத்துக்கொள்ளாது இருப்பதோடு, நம் கைகளுக்கும் ஏதாவது வேலை கொடுத்துக்கொண்டிருப்போம்' எனப் பதிவிட்டுள்ளார்.

`உங்கள் காலைத் தொட்டு வணங்குகிறேன்; வெளியில் வராதீங்க'- சென்னையில் கண்ணீர்விட்ட போலீஸ் எஸ்.ஐ #Corona

மகேஷ் பூபதி தம்பதி, சில தினங்களுக்கு முன் தாங்கள் வெளியில் சென்றபோது மாஸ்க் அணிந்திருந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, அதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுக்க செலிபிரிட்டிகள், வீட்டுக்குள் தங்களைத் தனிமைப்படுத்துக்கொள்ளும் அனுபவங்களை தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். நாமும் சோஷியல் டிஸ்டன்ஸிங், பிஸிக்கல் டிஸ்டன்ஸிங் கடைப்பிடிப்போம்!

அடுத்த கட்டுரைக்கு