Published:Updated:

திருமணம் மீறிய உறவு: கணவன் யாருடன் தங்குவது; போலீஸுக்குச் சென்ற இரண்டு மனைவிகள் - என்ன நடந்தது?

திருமணம்

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மனைவிகளுடன் வாரத்தில் எத்தனை நாள் வாழ வேண்டும் என்பது குறித்து போலீஸார் பாகப்பிரிவினை செய்துவைத்தனர்.

திருமணம் மீறிய உறவு: கணவன் யாருடன் தங்குவது; போலீஸுக்குச் சென்ற இரண்டு மனைவிகள் - என்ன நடந்தது?

உத்தரப்பிரதேசத்தில் இரண்டு மனைவிகளுடன் வாரத்தில் எத்தனை நாள் வாழ வேண்டும் என்பது குறித்து போலீஸார் பாகப்பிரிவினை செய்துவைத்தனர்.

Published:Updated:
திருமணம்

உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் நகரில் வசிப்பவர் யாஷின் ஷேக். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். புதிதாக வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் மீறிய உறவில் இருந்திருக்கிறார். அதோடு தன்னுடைய வீட்டுக்குத் தெரியாமல் அந்தப் பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணமும் செய்துகொண்டார். அதோடு அந்தப் பெண்ணை அதே நகரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கவைத்தார்.

திருமணம் மீறிய உறவு: கணவன் யாருடன் தங்குவது; போலீஸுக்குச் சென்ற இரண்டு மனைவிகள் - என்ன நடந்தது?

இரண்டாவது மனைவி, ``உங்களது வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள்’’ என்று தெரிவித்தார். அதற்கு யாஷின் ஷேக், ``என்னுடைய பெற்றோர் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கொஞ்சநாள் காத்திரு பெற்றோரிடம் பேசிவிட்டு உன்னை அழைத்துச்செல்கிறேன்’' என்று தெரிவித்தார். இப்படியே நாள்கள் சென்றுகொண்டிருந்தது. திடீரென யாஷின் தன்னுடைய இரண்டாவது மனைவியை விட்டுவிட்டு ஓடிவிட்டார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இரண்டாவது மனைவி தன் கணவனை பல இடங்களில் தேடினார். ஏற்கெனவே யாஷின் தெரிவித்திருந்த முகவரியில் அவரைத் தேடிச்சென்றார். அங்கு சென்று பார்த்தபோது, யாஷின் ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுடன் வசித்துவந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இரண்டாவது மனைவி காவல் நிலையத்தில் சென்று புகார் செய்தார். போலீஸார் மூன்று பேரையும் அழைத்துப்பேசினர். ஆனால், அவர்களால் பிரச்னைக்குத் தீர்வுகாண முடியவில்லை. இதனால் அவர்கள் பெண்கள் நல கவுன்சிலிங் சென்டருக்கு அவர்களை அனுப்பிவைத்தனர். இரண்டாவது மனைவியும் தன்னுடைய கணவருடன் வசிக்க வேண்டும் என்று உறுதியாகச் சொன்னார். இதையடுத்து, மூன்று பேரிடம் பேசி இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது.

காவல்துறை
காவல்துறை

அதன்படி வாரத்தில் திங்கள் கிழமையிலிருந்து புதன் கிழமை வரை முதல் மனைவியுடனும், வியாழக்கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை இரண்டாவது மனைவியுடனும் யாஷின் தங்க வேண்டும். இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில்தான் தங்குவார்கள். அதோடு ஞாயிற்றுக்கிழமை யாஷின் யாருடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு அவர் தங்கிக்கொள்ளலாம் என்று கவுன்சிலிங்கில் பங்கு வைக்கப்பட்டது. அதை மூன்று பேரும் ஏற்றுக்கொண்டனர். மூன்று பேரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.