Published:Updated:

`தேர்வு அறையில் சலுகை எதுவும் தேவையில்லை!' - ப்ளஸ் டூ தேர்வெழுதிய தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள்

தலையில் செல்லும் ரத்தநாளங்களில் உள்ள பிரச்னையால் இவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்து பிரிக்கவியலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களைத் தங்களால் வளர்க்க முடியாது எனக் கூறிய பெற்றோர் அவர்களைக் கைவிட்டனர். காப்பகத்தில் வளர்ந்தார்கள் வாணியும் வீணாவும்.

`தேர்வு அறையில் சலுகை எதுவும் தேவையில்லை!' - ப்ளஸ் டூ தேர்வெழுதிய தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள்

தலையில் செல்லும் ரத்தநாளங்களில் உள்ள பிரச்னையால் இவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்து பிரிக்கவியலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களைத் தங்களால் வளர்க்க முடியாது எனக் கூறிய பெற்றோர் அவர்களைக் கைவிட்டனர். காப்பகத்தில் வளர்ந்தார்கள் வாணியும் வீணாவும்.

Published:Updated:

தெலங்கானாவை சேர்ந்த தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள், இவ்வருடம் தங்களுடைய 12-ம் வகுப்பு தேர்வை எழுதி வருகின்றனர். அரசு சார்பில் தங்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு அறை சலுகைகளைத் தவிர்த்துள்ள இந்த சகோதரிகள், எதிர்காலத்தில் தாங்கள் ஆடிட்டர் ஆக விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள்
தலை ஒட்டிப்பிறந்த சகோதரிகள்
Image Credit - NDTV

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள வாரங்கல்லை சேர்ந்த கூலித்தொழில் செய்யும் தம்பதிக்கு, தலை ஒட்டிய நிலையில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் வாணி மற்று வீணா. தலையில் செல்லும் ரத்தநாளங்களில் பிரச்னை உள்ளதால் இவர்களுக்கு அறுவைசிகிச்சை செய்து பிரிக்கவியலாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களைத் தங்களால் வளர்க்க முடியாது எனக் கூறிய பெற்றோர் அவர்களைக் கைவிட்டனர். அதிலிருந்து காப்பகத்தில் வளர்ந்து வரும் வாணியும், வீணாவும் தற்போது 12-ம் வகுப்பு தேர்வை எழுதி முடித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தெலங்கானா அரசு சார்பில் இவர்களுக்குத் தேர்வறையில் சலுகைகள் அளிக்கப்பட்டாலும், தங்கள் இருவருக்கும் சலுகைகள் வேண்டாம் எனவும், தங்களுடைய படிப்பிற்கான கையேட்டை தாங்கள் இருவரும் படித்துள்ளோம் என்று கூறியும் தவிர்த்துள்ளனர். மேலும், தேர்வு எழுத தங்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் நேர சலுகையையும் நிராகரித்த இவர்கள் தேர்வு நேரத்துக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே தேர்வை முடித்துள்ளனர். எதிர்காலத்தில் ஆடிட்டர் ஆவதே கனவு என்று இருவரும் தெரிவித்துள்ளனர். சகோதரிகளின் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள், `தேர்வு நேரத்தின்போது இருவரும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை, வேகமாகத் தேர்வை எழுதி முடித்துவிடுகின்றனர்' என்று கூறியுள்ளனர்.

Exam (Representational Image)
Exam (Representational Image)

தொடர்ந்து, தேர்வின்போது ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு, `நாங்கள் போட்டியாளர்களாக இருக்கிறோம், தேர்வு நேரத்தில் ஒருவருக்கொருவர் பேசுவதில்லை' என்று கூறியிருக்கிறார் வாணி. நிறைய சவால்கள் இருந்தபோதிலும், வீணாவும் வாணியும் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள் என்பது, அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism