Published:Updated:

திருமணம் தாண்டிய உறவு; `ஆடம்பரச் செலவைச் சமாளிக்க முடியலை’ - மனைவியுடன் சேர்த்துவைக்கக் கதறும் நபர்

திருமணம் - சித்திரிப்புப் படம்

ஷேக் தனது உறவினர்களை அழைத்துச் சென்று, தன் மனைவியிடம் சமாதானம் பேசிப்பார்த்தார். ஆனாலும் ஷேக்கை அவரின் மனைவி ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டார்.

திருமணம் தாண்டிய உறவு; `ஆடம்பரச் செலவைச் சமாளிக்க முடியலை’ - மனைவியுடன் சேர்த்துவைக்கக் கதறும் நபர்

ஷேக் தனது உறவினர்களை அழைத்துச் சென்று, தன் மனைவியிடம் சமாதானம் பேசிப்பார்த்தார். ஆனாலும் ஷேக்கை அவரின் மனைவி ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டார்.

Published:Updated:
திருமணம் - சித்திரிப்புப் படம்

ஹைதராபாத்தின் குகத்பல்லி என்ற இடத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் ஷேக். இவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் என வாழ்க்கை நிம்மதியாக சென்றுகொண்டிருந்தது. கடந்த ஆண்டு ஷேக் திருமணமான ஒரு பெண்ணைச் சந்தித்தார். பின் இருவரும் எந்நேரமும் வாட்ஸ்அப்பில் சாட்டிங் செய்வது, வீடியோ காலில் பேசுவது என்று இருந்திருக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திடீரென இரண்டு பேரும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

10 லட்சம் கடன் வாங்கிச் செலவு:

கணவன் வீட்டைவிட்டு வெளியேறியதால், அவரின் மனைவி தனது குழந்தைகளிடம், `அப்பா டெல்லியில் வேலைக்காகச் சென்றிருக்கிறார்’ எனக் கூறி சமாதானப்படுத்தினார். வீட்டைவிட்டு திருமணத்தை தாண்டிய உறவில் இருந்த பெண்ணுடன் வெளியேறிய ஷேக்குக்கு, `ஏன் ஓடி வந்தோம்?’ என்ற ஒரு நிலை ஏற்பட்டது.

திருமணம் தாண்டிய உறவு; `ஆடம்பரச் செலவைச் சமாளிக்க முடியலை’ - மனைவியுடன் சேர்த்துவைக்கக் கதறும் நபர்

அப்பெண்ணின் ஆடம்பரச் செலவை சமாளிக்க முடியாமல், என்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் ஹைதராபாத்துக்கு வந்து தன் மனைவியிடம் தனது தவற்றை மன்னித்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டார். ஆனால் அவரின் மனைவி ஷேக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஷேக் இப்பிரச்னையை காவல் நிலையத்துக்கு எடுத்துச்சென்றார். போலீஸார் ஷேக் மனைவியிடம் சமாதானம் பேசிப்பார்த்தனர். ஆனால் ஷேக்கை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் அவர் மனைவி.

ஷேக் வீட்டைவிட்டு வெளியேறியபோது தன் திருமணத்தைத் தாண்டிய உறவு பெண்ணுக்காக ஆடம்பரச் செலவுக்கு 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். ஒரு மாதத்தில் தங்கும் செலவு, சாப்பாடு என 10 லட்சம் செலவு செய்ததாகவும், மேற்கொண்டு தன்னால் செலவைச் சமாளிக்க முடியாமல் ஓடிவந்துவிட்டதாகவும் ஷேக் போலீஸாரிடம் தெரிவித்தார். ஷேக் தனது உறவினர்களை அழைத்துச் சென்று தனது மனைவியிடம் சமாதானம் பேசிப்பார்த்தார். ஆனாலும் ஷேக்கை அவரின் மனைவி ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் புது உறவிலும் வாழ வழியில்லாமல், மனைவியும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் ஷேக் திணறிவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism