Published:Updated:

` ரூ.350 கோடியில் யாருக்கு எத்தனை பங்கு?'- 120 வாரிசுகளால் கதிகலங்கும் 8-வது ஹைதராபாத் நிஜாம்

ஹைதராபாத் நிஜாம்
ஹைதராபாத் நிஜாம்

நிஜாமின் 120 வாரிசுகளில் பலர், தற்போது தங்களின் அடிப்படைத் தேவைகளையே ஈடுசெய்ய முடியாத அளவுக்கு கடும் வறுமையில் உள்ளனர்.

70 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத் நிஜாம் பாகிஸ்தானுக்கு அளித்த நிதி வழக்கில், இந்தியாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வரவே, ரூ.350 கோடி பணம் நிஜாமின் பேரன்களுக்கு சொந்தமாகியுள்ளது.

நிஜாமின் பேரன்களான இளவரசர் முகார்ரம் ஜா உள்ளிட்ட இரண்டு பேர்தான், இந்த வழக்கை இந்திய அரசின் உதவியுடன் நடத்தி வெற்றி கண்டுள்ளனர். தீர்ப்பு சாதகமாக வந்தாலும் தற்போது இந்த வழக்கில் இன்னொரு சிக்கல் எழத் தொடங்கியுள்ளது. அது வரவுள்ள நிதியை எப்படி பிரிப்பது என்பதுதான். ஹைதராபாத்தை ஆண்டுகொண்டிருந்த ஏழாம் அசாஃப் ஜா நிஜாம் என அழைக்கப்படும் நவாப் மிர் உஸ்மான் அலிகான் சித்திக்கிற்கு மொத்தம் 16 மகன்கள் மற்றும் 18 மகள்கள். இதில் ஒரேயொரு மகள் மட்டும் உயிரோடு இருக்கிறார்.

ஹைதராபாத் நிஜாம்
ஹைதராபாத் நிஜாம்

இவருக்கு, பேரக்குழந்தைகள் மட்டும் 104 பேர் என்றும் இதில் சிலர் தற்போது உயிரோடு இல்லை என்றும் கூறப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி ஹைதராபாத், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நிஜாமின் குடும்பத்தார் 400-க்கும் மேற்பட்டவர்கள் வாழ்கின்றனர். இவர்கள், ஐந்தாம் மற்றும் ஆறாம் தலைமுறை வாரிசு எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நிஜாமின் 16 மகன்களில் ஒருவரான ஹஷாம் ஜா பகதூர் என்பவரின் மகனான நவாப் நஜாப் அலிகான் இப்போது சிக்கலைத் தொடங்கியுள்ளார். நாட்வெஸ்ட் வங்கியில் உள்ள ரூ.350 கோடி நிதி, எட்டாவது நிஜாம் என அறியப்படும் இளவரசர் முகர்ரம் ஜா பகதூர் மற்றும் அவரது தம்பி முஃபாக்கம் ஜா ஆகியோருக்குப் போகும் என்று கூறப்படும் நிலையில், `நிஜாமின் மற்ற சந்ததியினருக்கும் இந்த நிதியில் பங்களிக்க வேண்டும்' என கடைசி நிஜாம் நவாப் மிர் உஸ்மான் அலி பேரன்களில் ஒருவரான இந்த நவாப் நஜாப் அலிகான் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

`ஹைதராபாத் நிஜாம் பேரன்களுக்கே ரூ.350 கோடி!' - 60 ஆண்டுகளுக்குப் பிறகு  லண்டன் கோர்ட் தீர்ப்பு

``நான்தான் பழைய ரெக்கார்டுகளைத் தேடி எடுத்து வங்கியில் சிக்கியிருக்கும் அந்த நிதியைப் பெற முயற்சி எடுத்தேன். முகார்ரம் ஜா மற்றும் முஃபாக்கம் ஜா மட்டுமே சொத்துக்கு உரிமை கோருபவர்களாக இருந்தால், 2013-ம் ஆண்டு வரை அவர்கள் ஏன் இந்த வழக்கில் எதுவும் செய்யவில்லை. அவர்கள் அப்போது அமைதியாகத்தானே இருந்தார்கள். 2016 வரை இந்த வழக்கை லண்டன் வழக்கறிஞரை வைத்து வாதிட்டுவந்தேன். ஆனால், நிஜாம் எஸ்டேட் உடன் இணைந்து இந்த வழக்கை எதிர்த்துப் போராட வற்புறுத்தப்பட்டேன். காரணம், நிஜாம் எஸ்டேட்டின்கீழ் அவரது 120 சந்ததிகளும் உறுப்பினர்களாக உள்ளனர். நிஜாமின் 120 வாரிசுகளில் பலர், தற்போது தங்களின் அடிப்படைத் தேவைகளையே ஈடுசெய்ய முடியாத அளவிற்கு கடும் வறுமையில் உள்ளனர்.

ஹைதராபாத் நிஜாம்
ஹைதராபாத் நிஜாம்

நிஜாமின் அனைத்து வாரிசுகளுக்கும் இந்த நிதி பிரித்துக் கொடுக்கப்படும் என்ற உறுதி அளிக்கப்பட்டதாலேயே, நான் தனியாகப் போராடாமல் இந்திய அரசு, நிஜாம் எஸ்டேட் உடன் இணைந்து போராடினேன். முகார்ரம் ஜா மற்றும் முஃபாக்கம் ஜா இருவரும் எங்களுக்கான பங்கைக் கொடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்வோம். அமைதியாக இருக்க மாட்டோம். முகர்ரம் ஜா மற்றும் முஃபாக்கம் ஜா மட்டுமே தனது இரண்டு சட்ட வாரிசுகள் என்று எனது தாத்தா ஒருபோதும் கூறவில்லை. அவரது மகன்கள், பேரன்கள் மற்றும் பேத்திகள் அனைவரும் ஏழாம் நிஜாமின் வாரிசுகள்தான். முகர்ரம் ஜா மற்றும் அவரது சகோதரர் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசுகள் என்றால், மற்றவர்கள் நிஜாம் உருவாக்கிய பல்வேறு அறக்கட்டளைகளிலிருந்து நன்மைகளைப் பெற்றிருக்க மாட்டார்கள்.

பார்க்க சொர்க்கம்... உள்ளே நரகம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றித் தெரியுமா? #PoK

ஏன், 1995ல் நிஜாமின் நகைகளை இந்திய அரசு விற்றபோதுகூட கிடைத்த ரூ.206 கோடியை அனைத்து வாரிசுகளுக்கும் பிரித்துக்கொடுத்தது. நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், எங்களையும் சேர்த்திருப்பார்கள் என நம்புகிறோம். அப்படி இல்லையெனில், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்" என ஐ.ஏ.என்.எஸ் தளத்துக்குப் பேசியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், பல்வேறு சமஸ்தானங்கள் இருந்தாலும் முக்கியமானதாகக் கருத்தப்பட்டது ஹைதராபாத் சமஸ்தானம். இதை அப்போது ஆண்டுகொண்டிருந்தவர் ஹைதராபாத் ஏழாம் அசாஃப் ஜா நிஜாம் என அழைக்கப்படும் நவாப் மிர் உஸ்மான் அலிகான் சித்திக். அப்போதைய காலகட்டத்தில், உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் இவர்தான் எனக் கூறப்படுகிறது.

ஹைதராபாத் நிஜாம்
ஹைதராபாத் நிஜாம்

மிகப்பெரிய தன்னாட்சி அரசாக இருந்தது, நவாப் மிர் உஸ்மான் அலி ஆண்டு வந்த ஹைதராபாத் நிஜாம்தான். சுதந்திரத்துக்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராணுவம், ரயில் சேவை, தபால் துறை வசதி என ஹைதராபாத் நிஜாம் தன்னாட்சி அரசு நடத்திவந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ராணுவ நடவடிக்கைக்குப் பின்பே ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு சம்மதம் தெரிவித்தார் நிஜாம். பின்பு, 1967ல் உயிரிழந்தார் நிஜாம். இறப்பதற்கு முன்பாக தனது மூத்த மகன் அசாம் ஜா பகதூரை தவிர்த்துவிட்டு, அவருக்கு அடுத்தவரான முகார்ரம் ஜாவை தனது வாரிசு எனப் பட்டம் சூட்டினார்.

இந்த முகார்ரம் ஜா பெயரில்தான், தற்போது இந்த நிதி தரப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது. 85 வயதாகும் இந்த முகார்ரம் ஜா, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வெளிநாடு - ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் கழித்தவர். ஐந்து முறை திருமணமான இவர், விவாகரத்து செட்டில்மென்ட்டிலேயே தனது செல்வத்தின் பெரும்பகுதியை இழந்ததாகக் கூறப்படுகிறது.

`கோல்டு மெடல்.. ஜூனியர் கேடர்!'- இம்ரானை கிளீன் போல்டாக்கிய இன்டர்நெட் சென்சேஷன் விதிஷா மைத்ரா யார்?
அடுத்த கட்டுரைக்கு