Published:Updated:

``நான் லஞ்சம் வாங்குவதில்லை; சொல்லி அலுத்துப்போச்சு!’’ - நேர்மையான அதிகாரிக்கு வந்த சோதனை

கடந்த ஒரு வாரமாகத் தெலங்கானா மாநிலத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறார் அரசு அதிகாரி ஒருவர். காரணம் அவர் அலுவலகத்தில் வைத்திருக்கும் பதாகை அதில்,`நான் லஞ்சம் வாங்குவதில்லை. நேர்மையானவர்கள் என்னை எளிதில் அணுகலாம்.'

அசோக்குமார்
அசோக்குமார்

``நான் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லி அலுத்துப்போய்விட்டேன். இனிமேல் லஞ்சம் கொடுக்க அணுகாதீர்கள்'' என்று தனது அலுவலகத்தில் பதாகையை வைத்திருக்கிறார் தெலங்கானா அரசு அதிகாரி ஒருவர். அவரது இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

தெலங்கானா
தெலங்கானா

தெலங்கானாவில் கரீம்நகரில், மின் பகிர்வு நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுபவர் அசோக்குமார். இவர் கடந்த ஒரு வாரமாகத் தெலங்கானா மாநிலத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறார். காரணம் அவர் அலுவலகத்தில் வைத்திருக்கும் பதாகைதான். அதில்,`நான் லஞ்சம் வாங்குவதில்லை. நேர்மையானவர்கள் என்னை எளிதில் அணுகலாம்' என்று அவருடைய அலுவலகத்தின் உள்ளே வைக்கப்பட்டுள்ள பதாகையால் அந்த அதிகாரி பிரபலமாகி வருகிறார். "தனது வீட்டில் மூன்று வருடமாக மின்சாரம் இல்லை. மின் இணைப்பு வழங்கக்கோரி மின்வாரிய அதிகாரியை அணுகியிருக்கிறார்.

அவர்கள் லஞ்சம் கேட்கிறார்கள்" என்று அதிகாரி அசோக்குமாரை நாடியிருக்கிறார் இளைஞர் ஒருவர். உடனே அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கூப்பிட்டு லெப்ட் ரைட் வாங்கியதுமட்டுமல்லாமல் ஐந்து மணிநேரத்தில் அவர்கள் வீட்டுக்கு மின்சாரம் கிடைக்க வழிவகை செய்திருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் நேர்மையாக நடக்கும் விதத்தை இணையதளத்தில் எழுதியிருக்கிறார் அந்த இளைஞர். இதைக் கண்டதும் பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதுதான் ஹைலைட்.

பதாகை
பதாகை

இதுகுறித்து அவர் கூறுகையில், "2004-ல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த பின்னர், 2005-ம் ஆண்டில் மின்சாரத் துறையில் சேர்ந்தேன். அப்போதிருந்து, நான் லஞ்சம் வாங்குவதில்லை என்ற குறிக்கோளோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். காரணம் நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவன். பலரால் லஞ்சம் கொடுக்க முடியாது. அவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால்தான் என்னுடைய அலுவலகத்தில் இந்த பதாகையை வைத்தேன். இதைப் பார்த்துதான் என்னுடைய அலுவலகத்துக்கு நிறைய பேர் வருகிறார்கள்.

லஞ்சம் வாங்கிய எழுத்தர்; ஜீப்பில் இருந்தபடியே பதிவுசெய்த போலீஸ்! -தண்டனை கொடுத்த ராமநாதபுரம் எஸ்.பி

அதில் பலர் ஒரு வேலை முடிப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் லட்சம் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அவர்களிடம் நான் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லி அலுத்துப் போய்விட்டேன். இவர்களிடம் பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகத்தான் என்னுடைய மேஜையின் மேல்,

அசோக்குமார்
அசோக்குமார்

நான் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று போர்டை வைத்துள்ளேன். என்னுடைய செயலைப் பார்த்து பல உயர் அதிகாரிகள் கடுமையாகத் திட்டியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் வேலை செய்து வருகிறேன். நான் எப்போதும் ஊழலுக்கு எதிரானவன் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் செயலில் ஈட்டு வருகிறேன்" என்றார்.