Published:Updated:

`புல்லி பாய்' ஆப் உருவாக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை!' - கைதான அசாம் மாணவர் நீரஜ்

Jail (Representational Image)
News
Jail (Representational Image) ( Pixabay )

நீரஜ் புதிய புதிய சமூகவலைதள ஐடி உருவாக்கி அதன் மூலம் `புல்லி பாய்' ஆப்பில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மும்பை போலீஸார் இவ்வழக்கில் பெங்களூரு மாணவர் உட்பட இரண்டு பேரை கைது செய்தது.

சமீபத்தில் `புல்லி பாய்' என்ற ஆப்பில் பிரபல முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் வெளியிட்டு, ஏலம் விடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து மும்பை மற்றும் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மும்பை போலீஸார் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் உட்பட 3 மாணவர்களை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். டெல்லி போலீஸார், இந்த ஆப்பை உருவாக்க மூளையாகச் செயல்பட்ட நீரஜ் (21) என்ற மாணவரை அசாமில் கைது செய்து டெல்லிக்கு கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

நீரஜ்
நீரஜ்

போலீஸார் நீரஜ்ஜிடம் நடத்திய விசாரணையில், நீரஜ் தான் செய்த செயலுக்கு வருத்தப்படவில்லை என்றும், மாறாக தான் செய்தது சரிதான் என்றும் போலீஸாரிடம் விசாரணையில் தெரிவித்துள்ளார். மேலும் `புல்லி பாய்' ஆப்பை நவம்பர் மாதமே தான் உருவாக்கிவிட்டதாகவும், டிசம்பர் மாதம் அதனை வெளியிட்டதாகவும் நீரஜ் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

நீரஜ் புதிய புதிய சமூகவலைதள ஐடி உருவாக்கி அதன் மூலம் `புல்லி பாய்' ஆப்பில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மும்பை போலீஸார் இவ்வழக்கில் பெங்களூரு மாணவர் உட்பட இரண்டு பேரை கைது செய்தது குறித்து நீரஜ், ``நீங்கள் தவறான நபர்களைக் கைது செய்து இருக்கிறீர்கள், நான்தான் `புல்லி பாய்' ஆப்பை உருவாக்கினேன். கைது செய்யப்பட்டவர்களுக்கு இதில் எந்தவித தொடர்பும் கிடையாது. அவர்களை உடனே விடுதலை செய்யுங்கள்' என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதனை தொடர்ந்தே அவரது டிவிட்டர் ஐ.டியை ஆய்வு செய்து நீரஜை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை போலீஸார், உத்தரகாண்டில் கைது செய்யப்பட்ட ஸ்வேதா சிங் (19) என்ற பெண்தான் `புல்லி பாய்' ஆப்பை உருவாக்கினார் என்று கூறுகின்றனர். இதில் டெல்லி போலீஸாரும், மும்பை போலீஸாரும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே 'புல்லி பாய்' ஆப்பை உருவாக்கிய நீரஜ்ஜின் தந்தை தஸ்ரத் இது குறித்துக் கூறுகையில், ``என் மகனுக்கு மிகவும் சொற்ப எண்ணிக்கையில்தான் நண்பர்கள் இருக்கின்றனர். எப்போதும் லேப்டாப்புடன்தான் இருப்பான். வீட்டில் தனது அறையில் லேப்டாப்புடன் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வான். என்ன செய்கிறான் என்று எங்களுக்குத் தெரியாது. 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததற்காக என் மகனுக்கு அசாம் அரசு இலவச லேப்டாப் கொடுத்தது. அது கிடைத்த பிறகு வீட்டில் அவனது அறையில் எப்போதும் கதவைப் பூட்டிக்கொண்டுதான் இருப்பான். சின்ன வயதில் இருந்தே நீரஜ் எப்போதும் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தான்.

புல்லி பாயியில் வெளியான போட்டோ
புல்லி பாயியில் வெளியான போட்டோ

11, 12-ம் வகுப்பு படிக்கும் போது பல முறை பள்ளி முதல்வர் அவனது லேப்டாப்பை பறிமுதல் செய்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் நான் சென்று அதனை மீண்டும் வாங்கி வருவேன். என்ன தேவைக்காக லேப்டாப்பை எனது மகன் பயன்படுத்துகிறான் என்று தெரியாது. `புல்லி பாய்' ஆப்பை உருவாக்க அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. அவன் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். அவனுக்கு அடுத்த மாதம் இரண்டாவது செமஸ்டர் தேர்வு இருக்கிறது" என்று கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

போபாலில் உள்ள வி.ஐ.டி (Vellore Institute of Technology - VIT)-ல் படிக்கும் நீரஜ்ஜை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.