Published:Updated:

`காஃபி டே பங்குகளை மடைமாற்ற முயற்சி!' - சித்தார்த்தா மரண சர்ச்சையில் டி.கே.சிவக்குமார்

சித்தார்த்தா - டி.கே சிவகுமார்

‘ஜூலை 28-ம் தேதி சித்தார்த்தா போன் செய்து என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அவரைப் போன்ற ஒரு தைரியமான மனிதர் காணாமல் போனார் என்பதை நம்ப முடியவில்லை’ என்று டி.கே.சிவக்குமார் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

`காஃபி டே பங்குகளை மடைமாற்ற முயற்சி!' - சித்தார்த்தா மரண சர்ச்சையில் டி.கே.சிவக்குமார்

‘ஜூலை 28-ம் தேதி சித்தார்த்தா போன் செய்து என்னைச் சந்திக்க வேண்டும் எனக் கூறினார். அவரைப் போன்ற ஒரு தைரியமான மனிதர் காணாமல் போனார் என்பதை நம்ப முடியவில்லை’ என்று டி.கே.சிவக்குமார் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

Published:Updated:
சித்தார்த்தா - டி.கே சிவகுமார்

புகழ் பெற்ற காஃபி டே நிறுவனத்தின் உரிமையாளர் சித்தார்த்தா கடந்த இரு தினங்களுக்கு முன்பு, மங்களூரு நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து எந்த விவரமும் தெரியாமல் காவலர்கள் திணறி வருகின்றனர். இந்நிலையில் சித்தார்த்தா வீட்டில் நடந்த வருமானவரி சோதனையே தற்போது நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டி.கே சிவகுமார்
டி.கே சிவகுமார்

கர்நாடக அரசியலில் மாபெரும் முக்கிய அரசியல் புள்ளியாக உள்ளவர் காங்கிரஸைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார். இவர் இருப்பது என்னவோ காங்கிரஸ் என்றாலும் அந்த மாநிலத்தைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சியினரும் நெருக்கமாகப் பழகக்கூடியவர். அதனால்தான் சிவகுமாரிடம் எந்தக் கட்சிக்காரர்களும் பிரச்னைக்கு வரமாட்டார்கள். அந்த மாநிலத்திலேயே பெரும் பணக்கார அரசியல்வாதியான சிவக்குமாருக்குத் தனி இடம் உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2017-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த மாநிலங்களைத் தேர்தலில் சோனியா காந்தியின் ஆலோசகர் அகமது படேல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரை ஜெயிக்க வைக்கக் கூடாது என்பதற்காகக் காங்கிரஸ் வேட்பாளர்களை தங்கள் பக்கம் இழுக்கத் திட்டம் தீட்டியது பாஜக. ஆனால் அவர்களுக்கு முன்னால் முந்திக்கொண்ட சிவக்குமார், குஜராத்தில் உள்ள 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

சித்தார்த்தா
சித்தார்த்தா

அவர்கள் அனைவரையும் பெங்களூருவுக்கு அழைத்து வந்து சொகுசு விடுதியில் தங்க வைத்தார். தனி ஆளாக நின்று அனைத்து எம்.எல்.ஏ-க்களையும் கட்டுபடுத்தி அகமதுபடேலை மாநிலங்கலவைத் தேர்தலில் வெற்றி பெறவைத்த பெருமை சிவக்குமாரையே சேரும். குஜராத் எம்.எல்.ஏ-க்களின் விவகாரத்தைத் தொடர்ந்து, சிவக்குமாரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில் அவர் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர் வரி ஏய்ப்பு செய்ததாகவும் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிவக்குமாரின் வீட்டில் சோதனை நடந்த அடுத்த இரண்டு நாளில் காஃபி டே உரிமையாளர் சித்தார்த்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சித்தார்த்தாவின் மாமனார் எஸ்.எம்.கிருஷ்ணாவும் சிவக்குமாரும் நெருங்கிய நண்பர்கள். தன் மாமனார் மூலம் சிவக்குமாரின் நட்பைப் பெற்ற சித்தார்த்தா, சிவக்குமாரிடம் பல பணப் பரிமாற்றம் செய்துவந்துள்ளார். இவர்களின் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிவக்குமார் வீட்டில் சிக்கியதைத் தொடர்ந்தே சித்தார்த்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

சித்தார்த்தா எழுதிய கடிதம்
சித்தார்த்தா எழுதிய கடிதம்

வருமான வரித்துறை விவகாரம் தொடர்பாக சிவக்குமார் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோதெல்லாம் அவருடன் சித்தார்த்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். சிவக்குமாரின் நிதி மோசடிகளுக்கு சித்தார்த்தாவும் உடன் இருந்ததாகக் கூறி அவரின் 20 சதவிகிதப் பங்குகளை வருமான வரித்துறை முடக்கியதாகவும் அதன் பின்னரே சித்தார்த்தா பண நெருக்கடிகளை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக கடைசியாகச் சித்தார்த்தா எழுதிய கடிதம் எனக் கூறப்படுவதிலும், ‘தன்னை முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவை அனைத்தும் 2017-ம் ஆண்டு நடந்த ஐ.டி சோதனைக்குப் பிறகுதான் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள டி.கே.சிவக்குமாரின் சகோதரரும் காங்கிரஸ் எம்.பியுமான டி.கே.சுரேஷ், “சித்தார்த்தாவின் விஷயத்தில் வருமான வரித்துறை விசாரணை இன்னும் முடியவில்லை அதற்குள் அவருக்குச் சொந்தமான 20 சதவிகிதப் பங்குகளை வேறு ஒரு நிறுவனத்துடன் இணைக்கும் பணிகளில் ஐ.டி அதிகாரிகள் மிக வேகமாக ஈடுபட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட சிதார்த்தா உடல்
மீட்கப்பட்ட சிதார்த்தா உடல்
Twitter/@ItsDavidMaina

சித்தார்த்தாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மங்களூரு காவல்துறையினர், “சித்தார்த்தா தன் கடிதத்தில் எழுதியுள்ள அந்த முன்னாள் ஐ.டி அதிகாரி யார் என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அந்த கடிதத்தின் உண்மையை ஆராயும் விசாரணையும் மற்றொரு புறம் நடந்து வருகிறது” எனக் கூறியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism