Published:Updated:

``வாழ விரும்புகிறேன்; உயிரோடு இருப்பேனா?"- மருத்துவர்களிடம் கதறிய உன்னாவ் இளம்பெண்

Representation Image
Representation Image

உன்னாவ் பகுதியில் தீ வைத்து கொளுத்தப்பட்ட இளம்பெண், டெல்லி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 23 வயதுப் பெண், கடந்த மார்ச் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்தப்பெண் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர். ரேபரேலி நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக நேற்று காலை அந்தப் பெண், ரேபரேலி நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை கடத்தியுள்ளனர். பின்னர் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.

உன்னாவ்
உன்னாவ்

லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் சிகிச்சைக்காக அனுப்பினர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

`பாலியல் வழக்கு; தீயிட்டுக் கொளுத்திய கும்பல்!' - பற்றியெரிந்த தீயுடன் 1 கி.மீ ஓடிய இளம்பெண்

அந்தப்பெண்ணுக்கு சிகிச்சையளித்து வரும் டெல்லி மருத்துவமனை மருத்துவர் சுனில் குப்தா கூறுகையில்,``நேற்று இரவு 8 மணியளவில் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் சுயநினைவோடுதான் இருந்தார். அவர் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தாலும் எங்களுடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். குற்றவாளிகளை விடுவிக்க வேண்டாம் எனத் திரும்பத் திரும்ப எங்களிடம் கூறிக்கொண்டே இருந்தார். `நான் உயிரோடு திரும்பி வருவேனா?' என எங்களிடம் கேட்டார். `என்னைக் காப்பாற்றுங்கள். நான் வாழ விரும்புகிறேன்' என்றார்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது

இப்போது அவர் சுயநினைவோடு இல்லை. அவர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். பெட்ரோல் ஊற்றி அவரை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். நான் அவரை தனியாகச் சந்தித்தேன். அவரது உடல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தலை முதல் கால் வரை தீயில் எரிந்துள்ளது. எங்களுடைய குழு அவரை உயிரோடு மீட்க கடுமையாகப் போராடி வருகிறது” என்றார். பெண்ணைக் கடத்திச் சென்று தீவைத்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு