Published:Updated:

`நேர்மையின் பரிசு அவமானம்'- 28 ஆண்டுகளில் 53-வது டிரான்ஸ்ஃபர் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரி அசோக்!

"நேற்றுதான் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் சட்டமும் அதிகாரமும் இன்று மீறப்பட்டது. இதனால் சிலர் மகிழ்ச்சி அடையலாம்."

ஐஏஎஸ் அதிகாரி அசோக்
ஐஏஎஸ் அதிகாரி அசோக்

தனது 30 வருட பணி அனுபவத்தில், இதுவரை சுமார் 53 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் சண்டிகர் ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா. அவர் தனது ட்விட்டர் பதிவில், "நேர்மையின் பரிசு அவமானம்" என்று ட்வீட் செய்திருப்பது மாநில மக்கள் மனதில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அசோக் கெம்கா உட்பட, 14 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு, கடந்த புதன்கிழமை ஹரியானா மாநில அரசு பணி இட மாற்று அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில், கெம்கா தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிந்துள்ளார்.

`நேர்மையின் பரிசு அவமானம்'- 28 ஆண்டுகளில் 53-வது டிரான்ஸ்ஃபர் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரி அசோக்!

"நேற்றுதான் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் சட்டமும் அதிகாரமும் இன்று மீறப்பட்டுள்ளது. இதனால் சிலர் மகிழ்ச்சி அடையலாம்" என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம்தான் கெம்காவுக்கு ஹரியானா அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. முறைப்படி அவருக்கு, அடுத்த பணியாகக் காப்பகங்கள், தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் முதன்மைச் செயலாளராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு வேறு இடத்தில் பணி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஹரியானாவில் ஆட்சியமைத்த பா.ஜ.க - ஜனநாயக் ஜனதா கட்சியின் கூட்டாட்சி அமைந்த பின், நிர்வாக ரீதியாக நடக்கின்ற முதல் மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. இதற்குமுன் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா மீது நில ஆக்கிரமிப்புப் புகார் எழுந்தது. அப்போது, கடந்த 2012- ம் ஆண்டு, ராபர்ட் வத்ராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனத்துக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப் நிறுவனத்துக்குமிடையேயான ஒப்பந்தத்தை ரத்துசெய்து, அதிரடி காட்டினார் கெம்கா. இதற்காக துன்புறுத்தப்பட்டேன் என ஏற்கெனவே கெம்கா கூறியிருந்தார். இதற்காக, காங்கிரஸ் சட்டத்தை வளைத்தது எனவும் கூறினார்.

`நேர்மையின் பரிசு அவமானம்'- 28 ஆண்டுகளில் 53-வது டிரான்ஸ்ஃபர் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரி அசோக்!

பூபேந்தர் ஹூடா அரசு, கெம்கா மீது வத்ராவின் புகழுக்கு களங்கம் விளைவித்ததாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அவர் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டார் எனவும் அவர்மீது புகார் சுமத்தியது. பா.ஜ.க ஆட்சியமைத்ததும், அவரை நேர்மையாளராகக் கருதி முக்கியத்துவம் அளித்தது. ஆனால், 2015ல் பா.ஜ.க-வும் அவர்மீது 'பணியில் தவறான நடத்தை' எனக் கூறி குற்றச்சாட்டை சுமத்தத் தொடங்கியது. ஆனால் அவர், பணியிட மாற்றம் செய்யப்பட, அவருக்கும் ஒரு அமைச்சருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சியிலிருந்த கெம்கா டிரான்ஸ்ஃபர், தற்போது பா.ஜ.க ஆட்சியிலும் தொடர்கிறது.