Published:Updated:

பீகார்: "காற்று பலமாக வீசியதால் பாலம் இடிந்து விழுந்ததா?" - அதிர்ந்த நிதின் கட்கரி

நிதின் கட்கரி

பீகாரில் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கடந்த ஏப்ரல் 29-ம் இடிந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றுதான் காரணம் என்று கூறிய ஐஏஎஸ் அதிகாரியின் விளக்கத்தைக் கேட்டு வியப்படைந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

பீகார்: "காற்று பலமாக வீசியதால் பாலம் இடிந்து விழுந்ததா?" - அதிர்ந்த நிதின் கட்கரி

பீகாரில் கட்டப்பட்டு வந்த பாலம் ஒன்று கடந்த ஏப்ரல் 29-ம் இடிந்து விழுந்தது. இதற்கு பலத்த காற்றுதான் காரணம் என்று கூறிய ஐஏஎஸ் அதிகாரியின் விளக்கத்தைக் கேட்டு வியப்படைந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

Published:Updated:
நிதின் கட்கரி

பீகாரில் உள்ள சுல்தாங்கஞ்ச் மற்றும் அகுவானி காட் பகுதியின் இடையே பாலம் கட்டும் பணி 2014 -ல் தொடங்கப்பட்டது. இப்பணி 2019-ல் முடிவடைய இருந்த நிலையில் இன்னும் நிறைவுறாமல் கட்டப்பட்டது வருகிறது. இப்பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஏப்ரல் 29-ம் தேதி அன்று பெய்த இடியுடன் கூடிய மழையின்போது இடிந்து விழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பலத்த காற்றின் காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறினார். இதையடுத்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அப்பகுதின் எம்.எல.ஏ தலைமையில் பாலம் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும் '1,710 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் கட்டுமானப் பாலம் பலத்த காற்றை தாக்குப்பிடிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கூறியிருந்தார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இந்த நிலையில் இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "ஏப்ரல் 29-ம் தேதி அன்று பீகாரில் ஒரு பாலம் விழுந்தது. அதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டேன். பலத்த காற்றின் காரணமாக ஏற்பட்டதாகக் விளக்கமளித்தார்கள். பலத்த காற்றினால் பாலம் எப்படி இடிந்து விழும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரிகள் செய்த சில தவறுகள்தான் பாலம் இடிந்து விழுவதற்கு வழிவகுத்துள்ளது" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism