Published:Updated:

3 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமணம்; விவாகரத்தில் முடிந்த ஐ.ஏ.எஸ் தம்பதியின் காதல்!

டீனா-அதர்
டீனா-அதர்

மதம் மறுப்புத் திருமணம் என்பதால் இத்திருமணம் குறித்து வலதுசாரிகள் விமர்சித்து வந்தனர். அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பு இத்திருமணத்தை `லவ் ஜிஹாத்' திருமணம் என்று குறிப்பிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2015-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில் டீனா தாபி முதலிடத்தையும், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அதர் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் ஈடுபட்டு வந்த இருவரும் பின்னர் காதலிக்கத் தொடங்கினர். அதன்பின் 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மதம் மறுப்புத் திருமணம் என்பதால் இத்திருமணம் குறித்து வலதுசாரிகள் விமர்சித்து வந்தனர். அகில பாரதிய இந்து மகாசபா அமைப்பு இத்திருமணத்தை `லவ் ஜிஹாத்' திருமணம் என்று குறிப்பிட்டது.

டீனா தாபி
டீனா தாபி
Photo: Twitter/ @dabi_tina
இந்த 5 விஷயங்களை யோசிக்காமல் ரிலேஷன்ஷிப்புக்கு `Yes' சொல்லாதீர்கள்! #AllAboutLove - 5

அதோடு இத்திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய அந்த அமைப்பு, டீனாவின் பெற்றோருக்குக் கடிதம் எழுதியது. அக்கடிதத்தில், ``உங்கள் மகளின் சாதனை மிகவும் பெருமைப்பட வைக்கிறது. ஆனால், அவர் முஸ்லிம் வாலிபரைத் திருமணம் செய்தது வேதனையளிக்கிறது. இத்திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதரை இந்து மதத்துக்கு மாறும்படி வலியுறுத்த வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதர் இந்து மதத்துக்கு மாற தாங்கள் முழு உதவிகளைச் செய்வதாகவும், சர்வதேச சக்திகளும், முஸ்லிம் பழைமைவாதிகளும் சேர்ந்து இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற `லவ் ஜிஹாத்'தை ஊக்கப்படுத்துகின்றனர் என்றும் அந்த அமைப்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததோடு அதை இணையதளத்திலும் வெளியிட்டது. இந்த அநாகரிகமான கடிதத்துக்கு அப்போதே எதிர்ப்புகளும் கிளம்பின.

இப்பிரச்னை சற்று ஓய்ந்திருந்த நிலையில், டீனா சமூக வலைதளத்தில் திடீரென தனது பெயருக்குப் பின்னால் இருந்த கான் என்ற பெயரை அகற்றினார். இது அதருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ``ஏன் அதை நீக்கினாய்?'" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாகவே நீடித்து வந்த கருத்து வேறுபாடு காரணமாக டீனா ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் அதரிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார்.

அதர் ஆமிர் கான்
அதர் ஆமிர் கான்
Photo: Twitter: / @AtharAamirKhan
எப்போது ஒரு ரிலேஷன்ஷிப் `toxic' ஆக மாறுகிறது #AllAboutLove - 18

இருவரும் சேர்ந்து கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் விவாகரத்து பெற்றுக்கொள்வது என்று முடிவு செய்து, கடந்த நவம்பர் மாதம் இம்மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதை விசாரித்த குடும்ப நீதிமன்றம் ஐ.ஏ.எஸ் தம்பதிக்கு சிறப்பு திருமண சட்டத்தின் 28-வது பிரிவின் கீழ் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதர் இப்போது ஜம்மு காஷ்மீரில் பணியில் இருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு