பிரபல பத்திரிகையாளரான ராணா அயூப் பொதுமக்களிடமிருந்து பெற்ற நிதியைப் பணமோசடி செய்ததாகவும், தன்னுடைய தனிப்பட்ட செலவுகளுக்காக அந்தப் பணத்தை வேறு கணக்குக்கு மாற்றியதாகவும் அமலாக்க இயக்குநரகம் 1.77 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரின் சொத்துகளை முடக்கி அவரை விசாரணைக்கு உட்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில் ராணா அயூப், பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையத்தில் (ICFJ) உரையாற்றுவதற்கு லண்டன் செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றுள்ளார். ஆனால், விமான நிலையத்தில் அவரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். ICFJ-ல் தான் உரையாற்ற உள்ளதாகச் சில வாரங்களுக்கு முன்பே அவர் பொது அறிவிப்பை வெளியிட்டபோதும், அவர் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்ட பின்னரே அமலாக்க இயக்குநரகம் அவரது இன்பாக்ஸில் சம்மன் அனுப்பியுள்ளது குறித்து குற்றம்சாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரை விமான நிலையத்தில் பயணம் செய்யவிடாமல் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்திரிகையாளர்களுக்கான சர்வதேச மையம், ராணா அயூபுக்கு ஆதரவாக உடன் நிற்பதாகவும், பல விருதுகளை வென்ற தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளருக்கு எதிரான சட்ட மற்றும் டிஜிட்டல் துன்புறுத்தல் பிரசாரத்தை இந்திய அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் ட்வீட் செய்துள்ளது.