Published:Updated:

``2050-ம் ஆண்டில் இது நடந்தால், இந்தியாவில் யாரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள்!” - கெளதம் அதானி

கெளதம் அதானி

``2050-ம் ஆண்டின் வாக்கில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலராக மாறினால், இந்தியாவில் ஒருவரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள்."- தொழிலதிபர் கெளதம் அதானி.

``2050-ம் ஆண்டில் இது நடந்தால், இந்தியாவில் யாரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள்!” - கெளதம் அதானி

``2050-ம் ஆண்டின் வாக்கில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலராக மாறினால், இந்தியாவில் ஒருவரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள்."- தொழிலதிபர் கெளதம் அதானி.

Published:Updated:
கெளதம் அதானி

உலக அளவில் பெரும் பணக்காரர் பட்டியலில் 10-ம் இடத்தில் (04-04-2022- தரவுகளின்படி) இருக்கும், இந்திய தொழிலதிபரான கௌதம் அதானி, டைம்ஸ் நெட்வொர்க் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்தியாவின் வறுமை ஒழிப்பு குறித்த பேசிய அதானி, ``2050-ம் ஆண்டுக்கு சுமார் 10,000 நாள்கள் நாம் தொலைவில் இருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில், சுமார் 25 ட்ரில்லியன் டாலர்களை நம் இந்தியப் பொருளாதாரத்தில் நாம் சேர்ப்போம் என்று எதிர்பார்க்கிறேன். இது ஒரு நாளின் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 பில்லியன் டாலர் கூடுதலாகும்.

கெளதம் அதானி
கெளதம் அதானி

இது நிகழும் காலகட்டத்தில், நாட்டின் எல்லாவிதமான வறுமையையும் நாம் ஒழிப்போம் என்று எதிர்பார்க்கிறேன். 1.4 பில்லியன் மக்களின் வாழ்க்கையைக் குறுகியகாலத்தில் மேம்படுத்துவதென்பது ஒரு மாரத்தான்போல உணரலாம். ஆனால், இந்த நீண்டகால ஓட்டத்தில், இது வேகமாக இருக்கும். 2050-ம் ஆண்டின் வாக்கில் இந்தியாவின் பொருளாதாரம் 30 ட்ரில்லியன் டாலராக மாறினால், இந்தியாவில் ஒருவரும் பட்டினியுடன் உறங்க மாட்டார்கள்" எனக் கூறினார்.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தொழிலதிபர் கௌதம் அதானியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism