Published:Updated:

கொரோனா: கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கூடுதல் மதுக்கடைகளைத் திறக்கும் கேரள அரசு?

கொரோனா
கொரோனா

'கேரளா போல மதுக்கடைகளுக்கு மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது பாட்டில் வழங்கப்படும் என்ற உத்தரவையாவது தமிழக அரசு வெளியிட வேண்டும்'

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்துவது போல, கேரளாவில் 'பெவ்கோ' என்ற பெயரில் கேரள அரசே மதுக்கடைகளை நடத்தி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, பெவ்கோ கடைகளுக்கும் விடுமுறை விட வேண்டுமென்று கேரளாவில் கோரிக்கை எழுந்தாலும், மதுக்கடைகள் இன்னும் மூடப்படவில்லை. இந்த நிலையில், மக்கள் அதிகம் கூடும் மதுக்கடைகளில் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்தால், மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

மதுக்கடைகள்
மதுக்கடைகள்
Representational Image

கேரளக் கலால் வரித்துறை அமைச்சர் டி.எம்.ராமகிருஷ்ணா கூறுகையில், ``இப்போதுள்ள சூழலில் பெவ்கோ கடைகளை மூட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. தேவைப்பட்டால், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் கடைகளைத் திறக்க உள்ளோம். பெவ்கா பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்குத் தேவையான மாஸ்க்குகள், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, லகாரி நிர்ம்ஜனா சமிதி என்ற அமைப்பு , கேரளாவில் பெவ்கோ கடைகளை அடைக்க உத்தரவிடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா அச்சம் காரணமாக டாஸ்மாக் மதுக்கடை பார்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களை ஒட்டியுள்ள புறநகர்ப்பகுதிகளில் ஏராளமான பார்கள் சட்டவிரோதமாக இரவு நேரங்களில் இயங்குவதாகப் புகார்கள் குவிந்துள்ளன. இந்த விஷயத்தில் தமிழகஅரசு உரிய உத்தரவுகளை வழங்கி தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

`கட்சி ரெடி இல்லை; ஆனால், வாரிசு ரெடி' - ரஜினியின் கணக்கு எடுபடுமா?

அதேவேளையில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாஸ்க்
மாஸ்க்

'குறைந்தபட்சம் கேரளா போல டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே மது பாட்டில் வழங்கப்படும்' என்ற உத்தரவையாவது தமிழக அரசு வெளியிட வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு