Published:Updated:

`என் தாய்க்கு ஏதேனும் நேர்ந்தால்..?!'- கலங்கும் மெஹ்பூபா முப்தி மகள்

மெஹ்பூபா வின் ட்விட்டர் கணக்கை செப்டம்பர் முதல் மகள் இல்டிஜா முப்தி தான் கையாண்டு வருகிறார். இந்நிலையில் இல்டிஜா முப்தி, மெஹ்பூபா வின் உடல்நிலை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மெஹ்பூபா  முப்தி
மெஹ்பூபா முப்தி

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள அரசியல் தலைவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் என அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹ்பூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ட்விட்டர் பதிவு
ட்விட்டர் பதிவு

வீட்டுக்காவலில் உள்ள மெஹ்பூபாவின் ட்விட்டர் கணக்கை செப்டம்பர் மாதம் முதல் அவரின் மகள் இல்டிஜா முப்திதான் கையாண்டு வருகிறார். இந்நிலையில் மெஹ்பூபாவின் உடல்நிலை குறித்து இல்டிஜா முப்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், வீட்டுக் காவலில் இருக்கும் தன் தாய் குளிரால் மிகவும் அவஸ்தைப்பட்டு வருவதாகவும் இதுதொடர்பாக ஜம்மு- காஷ்மீர் நிர்வாகத்துக்குப் பலமுறை புகார் தெரிவித்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.

கடிதம்
கடிதம்

ஒரு மாதத்துக்கு முன்பே இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் அரசு நிர்வாகத்துக்கு எழுத்துப்பூர்வ வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறியிருக்கிறார். கடும் குளிரால் தன் தாய் மிகவும் மோசமான உடல்நிலையைச் சந்தித்து இருப்பதால் மிகவிரைவில் நல்ல பாதுகாப்பான இடத்துக்குத் தாய் மெஹ்பூபாவைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் இல்டிஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவரின் ட்விட்டர் பதிவில், ``மூன்று மாதங்களாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் என் தாயை கெஸ்ட் ஹவுஸில் காவல் வைத்திருக்கிறது. குளிரின் காரணமாக அவரது உடல்நிலை படுமோசமாக ஆகிவிட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தன் தாய்க்கு ஏதேனும் நேர்ந்தாலோ, உயிர் பாதிப்பு உருவானாலோ அதற்கு இந்திய அரசாங்கமே முழுப்பொறுப்பு என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இல்டிஜா முப்தி
இல்டிஜா முப்தி

உதவி ஆணையருக்கு தான் எழுதிய கையெழுத்து கடிதத்தையும் ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார், இல்டிஜா. அதில், டாக்டர் என் தாயைப் பரிசோதித்து பல்வேறு சோதனைகளை நடத்தியதில் அவரது உடலில் வைட்டமின்-டி, ஹீமோகுளோபின், கால்சியம் அளவு குறைந்துவிட்டது. எனவே, உடனே அவரை வேறொரு பகுதிக்குக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் பரிந்துரைத்ததாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.