Published:Updated:

கொரோனா: `விமான நிலைய உணவுகள்; மாறிய மவுசு!’ - டெல்லியில் மஞ்சள் பால், சென்னையில்...?

airport
airport

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவை உண்ண வேண்டும் என்று மருத்துவர்களால் வலியுறுத்தப்படுதையடுத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மார்ச் மாத இறுதியிலிருந்தே இந்தியாவில் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரயில் ,விமானம் என அனைத்து விதமான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டன. பின்னர் மே மாதத்தில் உள்ளூர் விமான சேவை தொடங்கியது. இதிலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு வதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவை உண்ண வேண்டும் என்று மருத்துவர்களால் வலியுறுத்தப்படுதையடுத்து விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ரசம்
ரசம்

இவர்கள் அங்குள்ள கடைகளில் மஞ்சள் பால், ரசம், துளசி- புதினா சாறு, குங்குமப் பூ பால், நெல்லிக்காய் மாங்காய் பானம் போன்றவற்றையே அதிகம் வாங்குகிறார்கள். விமான நிலையங்களில் ஏற்கெனவே பஃபே உணவு முறை நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தற்போது உணவுகள் பார்சலிலேயே வழங்கப்படுகின்றன. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் விமான நிலையங்களில் உணவு விற்பனை சரிந்துள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளே அதிகளவில் விற்பனையாகின்றன.

Vikatan

பெரும்பாலும் விமான நிலையங்களில் காபியும் , டீயுமே அதிக அளவில் விற்பனையாகும். இப்போது நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. தற்போது மஞ்சள் மற்றும் வைட்டமின் சி நிறைந்த பானங்களே அதிக அளவில் விற்பனையாகின்றன. இதுபற்றி டிராவல் ஃபுட் சர்வீஸின் முதன்மை இயக்க அலுவலர் கெளரவ் தேவான் கூறுகையில், "தற்போதுள்ள நிலைமையில் மஞ்சள் பால் தான் டெல்லியில் அதிகமாக விற்கும் மூன்றாவது பானமாக உள்ளது. இதேபோல் கொல்கத்தாவில் துளசி -புதினா சாறும், சென்னையில் ரசமும் அதிக அளவில் விற்பனையாகின்றன.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளையே அதிக அளவில் விற்க முடிவு செய்துள்ளோம். இதோடு உணவு வகைகளில் தயிர் சாதம் தான் தற்போது அதிக அளவில் விற்பனையாகிறது. கொரோனாவுக்கு பிறகு தயிர்சாதத்தின் விற்பனை 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது . இதே நேரத்தில் விற்பனை குறைந்த உணவுகளில் அசைவ உணவு முதலிடம் வகிக்கிறது. இது கொரோனாவால் ஏற்பட்ட மாற்றமா அல்லது அசைவத்தை வெளியிலிருந்து வாங்கி உண்ண மக்கள் தயங்குகிறார்களா என்பது தெரியவில்லை'' என்றார்.

டெல்லி விமான நிலையத்தில் மஞ்சள் பாலும், கொல்கத்தா விமான நிலையத்தில் துளசி -புதினா சாறும், சென்னை விமான நிலையத்தில் ரசமும் அதிக அளவில் விற்பனையாகின்றன.
Vikatan

கொரோனா காரணமாக உணவகங்களில் தொழில்நுட்ப பயன்பாடும் அதிகரித்துள்ளது. இப்போது உணவை ஆர்டர் செய்ய ஐபாடில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் போதும். பின்னர் மெனு கார்டில் இருந்து நமக்குத் தேவையான உணவுகளை வாங்கலாம். அதற்கான பணத்தையும் இணையத்திலேயே செலுத்திவிட வேண்டும். அதன் பின்பு உணவை பார்சலில் பெற்றுச் செல்லாம். இதனால் உங்களுக்கும், உணவகங்களில் இருக்கும் ஊழியருக்கும் எந்தத் தொடர்பும் ஏற்படாது. இவ்வாறு எதிர்காலத்தில், தொடர்பில்லாத முறையிலேயே தான் உணவகங்கள் இயங்கும். ஊரடங்கிற்குப் பின்னான காலகட்டத்தில் மக்களின் உணவு முறையும், நுகர்வு தன்மையும் பெருமளவில் மாறியிருக்கும். இப்போது அதனுடைய முன்னோட்டத்தை மட்டுமே நாம் விமான நிலைய உணவகங்களில் காண்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு