Published:Updated:

ஆதார் இல்லாததால் கர்ப்பிணியைத் திருப்பி அனுப்பிய மருத்துவர்கள்; தாயுடன் இறந்த இரட்டைக் குழந்தைகள்!

ஆதார் இல்லாததால் திருப்பியனுப்பப்பட்ட கர்ப்பிணி மரணம்

கர்நாடக அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்கு வந்த பெண்ணை ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவர்கள் திருப்பி அனுப்பியதில், இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணி வீட்டிலேயே இறந்தார்.

ஆதார் இல்லாததால் கர்ப்பிணியைத் திருப்பி அனுப்பிய மருத்துவர்கள்; தாயுடன் இறந்த இரட்டைக் குழந்தைகள்!

கர்நாடக அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்கு வந்த பெண்ணை ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவர்கள் திருப்பி அனுப்பியதில், இரட்டைக் குழந்தைகளுடன் கர்ப்பிணி வீட்டிலேயே இறந்தார்.

Published:Updated:
ஆதார் இல்லாததால் திருப்பியனுப்பப்பட்ட கர்ப்பிணி மரணம்

கர்நாடக மாநிலத்தில், ஆதார் அட்டை இல்லாததால் அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 30 வயது கர்ப்பிணி, வீட்டிலேயே பிரசவவலி ஏற்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இதில் தாயுடன் சேர்ந்து பிறக்கவிருந்த இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை பிறக்காமல் வயிற்றிலேயேயும், மற்றொரு குழந்தை பிறந்தும் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது. உயிரிழந்த கர்ப்பிணி தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்று தெரியவந்திருக்கிறது.

மரணம்
மரணம்

கர்ப்பிணி கஸ்தூரி, தன் கணவர் இறந்ததையடுத்து, 6 வயது மகளுடன் 40 நாள்களுக்கு முன்னர்தான் துமகூருக்கு வந்திருக்கிறார். இந்த நிலையில் கஸ்தூரி, பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் நேற்று முன்தினம் பிரசவத்துக்காக அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள மருத்துவர்களும், ஊழியர்களும் கஸ்தூரியிடம் ஆதார், மாநில அரசின் தாய் அட்டை இல்லாததால் சிகிச்சையளிக்க முடியாது எனத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்க்கும் அளவுக்கு வசதியில்லாத கஸ்தூரி மனவேதனையில் வீடு திரும்பியிருக்கிறார்.

 குழந்தை
குழந்தை
சித்திரிப்புப் படம்

அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் காலையில் கஸ்தூரி தன்னுடைய வீட்டிலேயே பிரசவவலி ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். அவருடைய வயிற்றிலிருந்த இரட்டைக் குழந்தைகளில், ஒரு குழந்தை பிறந்தும், மற்றொரு குழந்தை வயிற்றிலேயும் உயிரிழந்திருக்கிறது. இந்தச் சம்பவமறிந்த, அக்கம் பக்கத்தினர் உடனே அங்கு கூடிவிட்டனர். அதையடுத்து தகவலறிந்த, மாவட்ட சுகாதார அதிகாரிகள் டாக்டர் மஞ்சுநாத், மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வீணா ஆகியோர் அங்கு வந்தனர்.

பின்னர் இது குறித்து ஊடகங்களிடம் பேசிய டாக்டர் மஞ்சுநாத், ``கர்ப்பிணிக்கு முதலில் சிகிச்சை அளித்துவிட்டு ஆவணங்களைக் கேட்பது மருத்துவர், ஊழியர்களின் கடமை" என்று கூறினார். மேலும், அப்போது மருத்துவமனையில் பணியிலிருந்த மகப்பேறு மருத்துவர் உஷா, பிரசவ அறையிலிருந்த நான்கு செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் இரட்டைக் குழந்தைகள் மரணம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.