Published:Updated:

காரில் சாய்ந்துகொண்டிருந்த சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர்; வைரலான வீடியோ... கைதுசெய்த போலீஸ்!

காரில் சாய்ந்துகொண்டிருந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞர் கைது

கேரளாவில், காரில் சாய்ந்துகொண்டிருந்த 6 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

காரில் சாய்ந்துகொண்டிருந்த சிறுவனை காலால் எட்டி உதைத்த இளைஞர்; வைரலான வீடியோ... கைதுசெய்த போலீஸ்!

கேரளாவில், காரில் சாய்ந்துகொண்டிருந்த 6 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் காலால் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Published:Updated:
காரில் சாய்ந்துகொண்டிருந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞர் கைது

கேரளாவில் சாலையோரம் நின்றிருந்த காரில் சாய்ந்துகொண்டிருந்த 6 வயது சிறுவனை, இளைஞர் ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில், இளைஞர் சிறுவனை எட்டி உதைக்கும் காட்சி பதிவாகியிருக்கிறது. அதையடுத்து தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகிவருகின்றன.

காரில் சாய்ந்துகொண்டிருந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞன் கைது
காரில் சாய்ந்துகொண்டிருந்த சிறுவனை எட்டி உதைத்த இளைஞன் கைது

அந்த வீடியோவில், சாலையோரம் நின்றுகொண்டிருந்த வெள்ளை நிற கார்மீது சிறுவன் ஒருவன் சாய்ந்தவாறு நின்றுகொண்டிருக்கிறான். சிறிது நேரத்தில், அந்த காரிலிருந்து இறங்கி வந்த இளைஞர் ஒருவர், அந்தச் சிறுவனிடம் ஏதோ பேசிவிட்டு சிறுவனைக் கோபமாகக் காலால் எட்டி உதைத்துவிட்டு காருக்குள் செல்கிறார். அந்தச் சிறுவன் எதுவும் பேசாமல் ஓரமாகச் செல்கிறான். அதைத் தொடர்ந்து அங்கு நடந்ததைக் கண்ட பொதுமக்கள் சிலர் அந்த இளைஞரிடம் சென்று விசாரிக்கின்றனர். பிறகு அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த வழக்கறிஞர் ஒருவர், இது குறித்து போலீஸில் புகாரளித்திருக்கிறார். மேலும், இதில் பாதிக்கப்பட்ட சிறுவன் ராஜஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.

சிறுவனைத் தாக்கிய இளைஞர், பொன்னியம்பலத்தைச் சேர்ந்த ஷிஹ்ஷாத் எனத் தெரியவந்ததையடுத்து, போலீஸ் அந்த இளைஞரை நேரில் அழைத்து விசாரித்துவிட்டு அனுப்பியிருக்கின்றனர். இதனால் மக்களும் கோபமடைந்தனர். பின்னர் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாக, இன்று காலையில் அந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், இது தொடர்பாக விரைவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அந்த நபர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில சட்டப்பேரவைத் தலைவரும், தலச்சேரி எம்.எல்.ஏ-வுமான ஏ.என்.ஷம்சீர் தெரிவித்திருக்கிறார்.