Published:Updated:

புதுச்சேரி: சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை - ரூ.55 லட்சம் ஜிஎஸ்டி தொகையைச் சுருட்டிய மின்துறை ஊழியர்

கைது

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரூ.55 லட்சம் ஜி.எஸ்.டி தொகையைக் கையாடல் செய்த மின்துறை ஊழியரை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

புதுச்சேரி: சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை - ரூ.55 லட்சம் ஜிஎஸ்டி தொகையைச் சுருட்டிய மின்துறை ஊழியர்

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ரூ.55 லட்சம் ஜி.எஸ்.டி தொகையைக் கையாடல் செய்த மின்துறை ஊழியரை அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

Published:Updated:
கைது

புதுச்சேரி திப்புராயப்பேட்டையில் மின்துறை தலைமை அலுவலகம் இருக்கிறாது. இங்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம், நிதி கட்டுப்பாட்டாளர், மின்கட்டணம் வசூல், பராமரிப்பு அலுவலகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. சில நாள்களுக்கு முன்பு நான்கு வருடங்களாக ஜி.எஸ்.டி செலுத்தாதது ஏன் என்று மின்துறைக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது ஜி.எஸ்.டி அலுவலகம். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மின்துறை அதிகாரிகள், உடனே விசாரணையில் இறங்கினர். தொடர்ந்து மின்துறை கணக்கு வைத்திருக்கும் வங்கியில் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வுசெய்தனர். அப்போது மின்துறை கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பணம் வேறொரு வங்கிக் கணக்குக்குச் சென்றிருப்பது தெரியவந்தது.

புதுச்சேரி
புதுச்சேரி

அதனால் உடனே மின்துறை அதிகாரிகள் ஓதியன்சாலை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், பணப் பரிவர்த்தனை நடைபெற்ற வங்கிக் கணக்கை ஆய்வுசெய்தனர். அப்போது அந்தக் கணக்கு எண், மின்துறை அலுவலகத்தில் இளநிலை எழுத்தராக (எல்.டி.சி) பணிபுரியும் மூலகுளத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருடையது என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பணத்தை, தான் கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும், பல்வேறு தவணைகளில் கையாடல் செய்த அந்தப் பணத்தில் தனது கடன்களை அடைத்ததாகவும், சொகுசு கார்களை வாங்கியதாகவும் வாக்குமூலம் அளித்தார். அதையடுத்து அவரிடமிருந்த இரண்டு கார்களைப் பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு பதிவுசெய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.