Published:Updated:

அரசு மருத்துவமனையில் `பீர்' பாட்டிலுடன் பெண் ஊழியர்கள்? - வைரலான வீடியோ... வலுக்கும் கண்டனம்!

அரசு மருத்துவமனையில் `பீர்' பாட்டிலுடன் பெண் ஊழியர்கள்?

தெலங்கானா அரசு மகப்பேறு மருத்துவமனையொன்றில், பெண் ஊழியர்கள் சிலர் பீர் பாட்டிலுடன் பிறந்தநாள் கொண்டாடியதாகக் கூறப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா மாநிலத்தின், ஹனம்கொண்டாவிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில், பெண் ஊழியர்கள் சிலர் பீர் பாட்டிலுடன் பிறந்தநாள் கொண்டாடியதாக பகிரப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மேலும், இந்த வீடியோ மருத்துவமனையிலிருக்கும் நோயாளியின் உறவினரால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் இந்த வீடியோ வைரலானதையடுத்து, இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டிருக்கின்றனர்.

அரசு மருத்துவமனையில் `பீர்' பாட்டிலுடன் பெண் ஊழியர்கள்
அரசு மருத்துவமனையில் `பீர்' பாட்டிலுடன் பெண் ஊழியர்கள்

அதைத் தொடர்ந்து விசாரணையில், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் உட்பட இரண்டு பெண் ஊழியர்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனாலும், இத்தகைய குற்றச்சாட்டை அவர்கள் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால், பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என மருத்துவமனை உயரதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர். மேலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நோயாளிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

மருத்துவமனை
மருத்துவமனை

இது தொடர்பாக, நோயாளியின் உதவியாளர் ஒருவர், ``மருத்துவமனையில் உள்ள பெண் ஊழியர்கள் மது அருந்திய பிறகு நோயாளிகளுக்கு எப்படி சேவைகளை வழங்குவார்கள்? எனவே தங்களின் பணியை புறக்கணித்துவிட்டு இத்தகைய செயல்களில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று தெரிவித்திருக்கிறார். மேலும் பொதுமக்களும், மருத்துவமனையின் அருகிலேயே பல அரசு அலுவலகங்கள் இருந்தும், கண்காணிப்பு ஏதும் இல்லை என்றும், உயரதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.