Published:Updated:

தூக்கத்தில் இருந்தவருக்கு அதிர்ச்சி தந்த குரங்கு! - மாரடைப்பு ஏற்பட்டதால் பரிதாப பலி

குரங்கு

தூக்கத்திலிருந்து எழுந்த ராஜு, திடீரென தன் கண்முன்னே பெரிய குரங்கு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

தூக்கத்தில் இருந்தவருக்கு அதிர்ச்சி தந்த குரங்கு! - மாரடைப்பு ஏற்பட்டதால் பரிதாப பலி

தூக்கத்திலிருந்து எழுந்த ராஜு, திடீரென தன் கண்முன்னே பெரிய குரங்கு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

Published:Updated:
குரங்கு

தெலங்கானா மாநிலம், ஹனுமன் நகரில், ருத்ரோஜூ ராஜு என்பவர் தன்னுடைய மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்துவந்தார். ஹனுமன் நகரில் குரங்குகள் நடமாட்டம் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் எப்போதும்போல எழுந்த ராஜுவின் மனைவி, வீட்டுக்கு வெளியே உள்ள குழாயில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றிருக்கிறார்.

மாரடைப்பு
மாரடைப்பு

அவர் வீட்டுக்கதவை மூடாமல் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், திடீரென பெரிய குரங்கு ஒன்று கதவு திறந்திருந்ததால் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறது. பின்னர் தண்ணீர் எடுத்துவிட்டுத் திரும்பிய ராஜுவின் மனைவி, குரங்கைக் கண்டு அலறியிருக்கிறார். அப்போது தூக்கத்திலிருந்து எழுந்த ராஜு, திடீரென தன் கண்முன்னே பெரிய குரங்கு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார்.

Death (Representational Image)
Death (Representational Image)

இதனால் அந்த இடமே சற்று நேரத்தில் பரபரப்பாக மாற, மயங்கி விழுந்த ராஜுவை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், ராஜுவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே தற்போது சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

மேலும், அந்தப் பகுதியில் குரங்கு தொல்லை அதிகம் இருப்பதாகப் பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.