Published:Updated:

உ.பி: `அமரர் வாகனத்துக்குக் காசு இல்லை!' - 2 வயது குழந்தையின் உடலைச் சுமந்து சென்ற 10 வயது சகோதரன்

குழந்தையின் உடலைச் சுமந்து சென்ற 10 வயது சகோதரன்

உத்தரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், கார் மோதி இறந்த தன்னுடைய 2 வயது சகோதரனின் உடலை மருத்துவமனையிலிருந்து கையில் சுமந்து சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி கலந்த சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

குழந்தை
குழந்தை

கடந்த வெள்ளிக்கிழமையன்று, டெல்லி-சஹாரன்பூர் நெடுஞ்சாலையிலுள்ள பாக்பத்தில் ஒரு வங்கியின் அருகே 2 வயது குழந்தை ஒன்று, கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்த போலீஸ், `குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டிருந்ததால், எரிச்சலில் வளர்ப்புத்தாய் அந்தக் குழந்தையை காரின் முன் தள்ளிவிட்டிருக்கிறார். அதில் அந்தக் குழந்தை அடிபட்டு இறந்துவிட்டது' எனத் தெரிவித்தது. மேலும் குழந்தையின் வளர்ப்புத்தாய், அந்த இடத்திலேயே போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

குழந்தையின் உடலை சுமந்துச் சென்ற 10 வயது  சகோதரன்
குழந்தையின் உடலை சுமந்துச் சென்ற 10 வயது சகோதரன்

அடுத்த நாள், குழந்தையின் தந்தை, 10 வயது சகோதரன் இருவரும் உடலைப் பெற்றுக்கொள்வதற்காக மருத்துவமனைக்கு வந்திருக்கின்றனர். குழந்தையின் உடலைப்பெற்றுக்கொண்ட தந்தை, அங்கிருந்து சுமார் 50 கி.மீ தொலைவிலுள்ள சொந்த கிராமமான லிலோன்கேடிக்குச் செல்ல வாகனத்தை ஏற்பாடு செய்ய ரூ.1,000 இல்லாததால், அங்குள்ள அதிகாரிகளிடம் வாகனத்தை ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். ஆனால், அதிகாரிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் ஒருகட்டத்தில் நம்பிக்கையிழந்த தந்தை, குழந்தையின் உடலை கையிலேயே சுமந்தபடி, தன்னுடைய 10 வயது மகனுடன் அங்கிருந்தே தன் கிராமத்துக்கு நடக்கத் தொடங்கியிருக்கிறார்.

சிறிது தூரம் சென்றதும், அந்த 10 வயது சிறுவன் அழுதுகொண்டே, தன்னுடைய 2 வயது சகோதரனின் உடலை கையிலேந்திக்கொண்டு நடந்தான். இதைப் பார்த்த மக்களில் சிலர், அதை வீடியோ எடுக்கத் தொடங்கினர். அதன் பின்னர் மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக வாகனத்துக்கு ஏற்பாடு செய்தனர். இருப்பினும், குழந்தையின் உடலை கையிலேந்திச் செல்லும் 10 வயது சிறுவனின் அழுகை அங்கிருந்தவர்களைக் கண்கலங்கச்செய்திருக்கிறது.

மேலும் இது குறித்து விளக்கமளித்த தலைமை மருத்துவ அதிகாரி, ``அமரர் வாகனம் வருவதற்கு சிறிது நேரம் காத்திருக்குமாறு அவர்களிடம் கூறினோம். ஆனால் வாகனம் வர தாமதமானதால் அதிர்ச்சியில் அவர்கள் அங்கிருந்து உடனடியாகப் புறப்பட்டுவிட்டனர். இதில் வாகனம் வர ஏன் தாமதமானது என்பது குறித்து நாங்கள் விசாரித்துவருகிறோம்" எனக் கூறினார்.