Published:Updated:

15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மகன்; கர்ப்பமானதால் தீ வைத்துக் கொளுத்திய தாய், சகோதரி!

குற்றம்
News
குற்றம்

பாலியல் வன்கொடுமை செய்த நபரின் தாயும், சகோதரியும், சிறுமிமீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர்.

15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த மகன்; கர்ப்பமானதால் தீ வைத்துக் கொளுத்திய தாய், சகோதரி!

பாலியல் வன்கொடுமை செய்த நபரின் தாயும், சகோதரியும், சிறுமிமீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர்.

Published:Updated:
குற்றம்
News
குற்றம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில், பாலியல் வன்கொடுமைக்குள்ளான 15 வயது சிறுமி கர்ப்பமானதையடுத்து, குற்றம் செய்தவரின் தாய், மற்றும் சகோதரி, திருமணம் செய்துவைப்பதாகக் கூறி சிறுமியை தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சுமார் 3 மூன்று மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமிக்கு, கடந்த வியாழனன்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சிறுமியின் தாயார், அவரை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்றதில், சிறுமி கர்ப்பமாகியிருப்பது தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை செய்த நபரின் தாயார், சிறுமியை தன்னுடைய மகனுக்கே திருமண செய்துவைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். திடீரென சனிக்கிழமை இரவன்று, பாலியல் வன்கொடுமை செய்த நபரின் தாயும், சகோதரியும், சிறுமிமீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியிருக்கின்றனர். பின்னர் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இந்த விவகாரம் போலீஸாரின் கவனத்துக்குச் சென்றது.

கைது
கைது

இது குறித்துப் பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ``பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது குற்றவாளிக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சிறுமியைத் தீயிட்டுக் கொளுத்திய குற்றத்துக்காக, அவரின் தாய் மற்றும் சகோதரிமீது கொலை முயற்சி குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவரின் தாயார், சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து, குற்றவாளியையும் அவரின் சகோதரியையும் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

மேலும், உயிர் பிழைத்த பெண்ணின் சிகிச்சைக்காக அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக காவல்துறை எஸ்.பி தெரிவித்திருக்கிறார்.