Published:Updated:

கொரோனா தாக்கம்:`கிராமசபைக் கூட்டம் ரத்து; பள்ளிக் கொண்டாட்டங்கள் இல்லை!’ - சுதந்திர தின விழா 2020

 சுதந்திர தின விழா நாடு
சுதந்திர தின விழா நாடு

`கொரோனா பரவல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படாது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினம், மே முதல் நாள், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி நாள்களில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

இந்தியா சுதந்திரம் பெற்று கடந்த 73 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினம் விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. சுதந்திர தினம் என்றாலே அதை வழக்கமாக எப்படிக் கொண்டாடுவோம் என்பது ஊரறிந்த, நாடறிந்த செய்தி. ஆனால், கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இம்முறை 74-வது சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் குறைந்துபோயுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவன நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது சுதந்திர தினமும் கொண்டாட்டங்களைக் குறைத்துக்கொண்டு நடைபெறுகிறது.

கிராமசபைக் கூட்டம்
கிராமசபைக் கூட்டம்

`கொரோனா பரவல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படாது’ என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினம், மே முதல் நாள், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தக் கூட்டத்தில் ஊராட்சியின் செலவுகள், திட்டப் பணிகள் போன்றவை குறித்து ஆலோசனை நடைபெறும் . ஊராட்சி அமைப்புகளின் ஆணி வேராக விளங்குவது கிராம சபைகளே. தற்போது அவற்றையே நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Vikatan

அதுமட்டுமன்றி பள்ளி, கல்லூரிகளில் வழக்கமாக கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாகக் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவும் இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களை அழைத்துக் கூட்டத்தை கூட்டாமல், தலைமை ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்குச் சென்று தேசியல்கொடியை ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கொடியேற்றிய செங்கோட்டையில்கூட கண்கவர் நிகழ்ச்சிகள் ஏதும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றும் விழாவும் ஆடம்பரம் ஏதுமின்றியே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தாக்கம்:`கிராமசபைக் கூட்டம் ரத்து; பள்ளிக் கொண்டாட்டங்கள் இல்லை!’ - சுதந்திர தின விழா 2020

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதே சூழல்தான் நிலவுகிறது. தேசப்பற்றை, கூட்டமாகக் கூடிக் கொண்டாடி மகிழ்ந்து பழகிய மக்களுக்கு, இந்தப் பொதுமுடக்கம் என்பது நிச்சயம் புதிய அனுபவமே. இப்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் சுதந்திர தினம் இம்முறை எளிமையாக நடப்பது நமக்கு புதிது என்றாலும், மக்கள்நலனைக் கருத்தில் கொண்டு இதை ஏற்றுக்கொள்வதே நல்லது. சுதந்திரக் காற்றைப் பாதுகாப்பாக சுவாசிப்போம்!

அடுத்த கட்டுரைக்கு