Published:Updated:

Helina ஹெலினா: இந்தியா உருவாக்கியுள்ள சுதேசி ஏவுகணை; பரிசோதனை வெற்றி!

Helina ஹெலினா

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 310 ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கிறார்.

Helina ஹெலினா: இந்தியா உருவாக்கியுள்ள சுதேசி ஏவுகணை; பரிசோதனை வெற்றி!

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 310 ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கிறார்.

Published:Updated:
Helina ஹெலினா

ஹெலிகாப்டரிலிருந்து பாய்ந்து சென்று, ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் எதிரிகளின் டாங்கிகளையும் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஹெலினா ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுதேசி ஏவுகணை. டி.ஆர்.டி.ஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு இது. ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரான் பாலைவனத்தில் ஏற்கெனவே இது பரிசோதனை செய்யப்பட்டது. இப்போது லடாக்கின் பனி படர்ந்த மலைப் பிரதேசங்களில் ஹெலினாவை ஏவி சோதனை நடத்தப்பட்டது. இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை அதிகாரிகள் முன்னிலையில் விஞ்ஞானிகள் குழு இந்த சோதனையை நடத்தியது.

Helina ஹெலினா
Helina ஹெலினா

ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்ட ஏவுகணை, தொலைதூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கியை துல்லியமாகத் தாக்கி அழித்தது. பரிசோதனை வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து, இது இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட உள்ளது.`Helicopter based Nag missile' என்பதன் சுருக்கம்தான் ஹெலினா. இந்த ஹெலினா ஏவுகணை உலகின் மிகவும் மேம்பட்ட பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களில் ஒன்று. மூன்றாம் தலைமுறை ஏவுகணையான இது, இரவு பகல் என்று எந்த நேரத்திலும் சென்று தாக்கும். கடும் வெயில், பனிப்பொழிவு என்று எந்த சூழலிலும் துல்லியமாக இயங்கும். 500 மீட்டர் தூரத்திலிருந்து 7 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும். தரை மட்டத்தில் பறந்து சென்று பீரங்கி மற்றும் கவச வாகனங்களை முன்புறமாகவும் அழிக்கும். உயரத்திலிருந்து பூமிக்குப் பாய்ந்து பீரங்கியின் தலைப்புறத்திலும் தாக்கி அழிக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்ஃப்ரா ரெட் இமேஜை அடிப்படையாக வைத்தே இந்த ஏவுகணை இலக்கைத் தாக்கும். உலகிலேயே இப்படிப்பட்ட டெக்னாலஜி கொண்ட அதிநவீன ஹெலிகாப்டர் ஏவுகணையாக ஹெலினா இருக்கிறது. இலக்கு எது என்று தீர்மானித்துவிட்டு ஏவினால் மட்டுமே போதுமானது. இலக்கைத் தாக்கும் வரை இதற்கு வழிகாட்டத் தேவையில்லை. குறி தவறாமல் போய்த் தாக்கிவிடும்.

இந்த வகை ஏவுகணை ஒன்றின் விலை ஒரு கோடி ரூபாய். இதற்கு முன்பு ரஷ்யத் தயாரிப்பான ஷ்ட்ராம் ஏவுகணைகளையே பயன்படுத்தி வந்தோம். அதைவிட அதிக தூரம் சென்று, துல்லியமாகத் தாக்கும் தன்மை கொண்டது ஹெலினா. இந்திய ராணுவமும் விமானப்படையும் இனி இதைப் பயன்படுத்தப் போகின்றன.

Helina ஹெலினா: இந்தியா உருவாக்கியுள்ள சுதேசி ஏவுகணை; பரிசோதனை வெற்றி!

உலகிலேயே அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையை மாற்றி, இந்தியாவில் நிறைய ஆயுதங்களை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 310 ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் பட்டியலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இவற்றை இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்துவிட்டு இந்தியாவிலேயே இவற்றை உருவாக்க வேண்டும் என்பது இலக்கு. டாங்கிகள் முதல் ஹெலிகாப்டர்கள் வரை இந்தப் பட்டியலில் உள்ளன.

ஹெலிகாப்டர் ஏவுகணையும் இதில் உண்டு. பிரம்மோஸ் போன்ற பிரமாத ஏவுகணைகளைத் தயாரித்த இந்திய விஞ்ஞானிகள் குழு, ஹெலினாவையும் உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறது. சுதேசியாக ஆயுதங்களைத் தயாரிப்பதன் மூலம் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை மிச்சம் செய்ய முடியும். இதற்கான முதல் அடியை ஹெலினா மூலம் எடுத்து வைத்திருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism