Published:Updated:

``வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டும் திறன் கொண்டது இந்தியா!” - பில்கேட்ஸ்

வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவில் உள்ளதாக பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை இயக்குநரும், உலகின் மிகப்பெரும் பணக்காரருமான பில்கேட்ஸ் தன் வருமானத்தின் ஒரு பகுதியை உலகளாவிய வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கு அளித்துவருகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளை சார்பில் உலகம் முழுவதும் உள்ள ஏழைக் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 1.8 பில்லியின் அமெரிக்க டாலர் வரை செலவு செய்துவருகிறார். உலக பணக்காரராக இருந்தாலும் பில்கேட்ஸின் எளிமை மற்றும் பிறருக்கு உதவும் மனம் போன்றவை அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்படும் ஒன்று.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

இவர் தன் தொழிலில் மட்டுமல்லாது அனைத்து நாடுகளிலும் நடக்கும் அரசியல், பொருளாதாரம், கல்வி, சமூக நிலை போன்ற அனைத்திலும் கவனம் செலுத்திவருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் உள்ள அவரது அறக்கட்டளையில் ஆய்வு செய்வதற்காக மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார் பில்கேட்ஸ். அப்போது, `வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான திறன் இந்தியாவிடம் உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். பி.டி.ஐ ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதைக் கூறியுள்ளார் பில்கேட்ஸ்.

``அடுத்த சில ஆண்டுகளைப் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. ஆனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மிக விரைவான வளர்ச்சிக்கான சாத்தியங்கள் உள்ளன. இது மக்களை வறுமையிலிருந்து உயர்த்தும். சுகாதாரம் மற்றும் கல்விக்கு இந்திய அரசு அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இந்தியப் பொருளாதாரம்
இந்தியப் பொருளாதாரம்

இந்தியா அதிவேக வளர்ச்சியைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் நிச்சயம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என அனைவரும் நம்புகிறார்கள். எங்கள் எல்லா பகுதிகளுக்கும் தேவையான கண்டுபிடிப்பாளர்களை வழங்கும் முக்கிய இடமாக இந்தியா உள்ளது.

Vikatan

இந்தியாவின் ஆதார் அட்டை திட்டம், நிதி சேவைகள் மற்றும் மருந்து துறை செயல்பாடு போன்றவை பாராட்டும்விதமாக உள்ளது. பிற நாட்டு மக்கள் இந்தியாவைப் பற்றி நினைக்கும்போது தகவல் தொழில்நுட்ப சேவைகளையே இங்கு செய்யப்படும் பெரிய பணியாக நினைக்கிறார்கள். ஆனால், இங்கு மனித நிலைகளை மேம்படுத்தும் பணிகள் பற்றி அவர்களுக்குக் குறைவாகவே தெரியும். விரைவில் இது பிற நாடுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்” என இந்தியா பற்றி பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்

கடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்த ஆண்டு மீண்டும் முதல் இடத்தைக் கைப்பற்றியுள்ளார் பில்கேட்ஸ். இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் மந்தமாக உள்ளதாக கூறப்படும் இந்த நிலையில், உலக பணக்காரர் பில்கேட்ஸின் கருத்து அதிக கவனம் பெற்றுள்ளது.