Published:Updated:

`94 வது இடத்தில் பாகிஸ்தான்; 102 வது இடத்தில் இந்தியா!’ - பசியால் வாடும் நாடுகளின் பட்டியல் வெளியீடு

உலக அளவில் அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது.

பசி
பசி

ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பசி
பசி

2019 -ம் ஆண்டு 117 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்தியா 102-வது இடத்தில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவைப் பொறுத்தவரை அதிகம் பசியால் வாடும் மக்கள் கொண்ட நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vikatan

இலங்கை 66-வது இடத்திலும் வங்கதேசம் 88-வது இடத்திலும் பாகிஸ்தான் 94-வது இடத்திலும் உள்ளது. பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைவிடப் பின்தங்கிய நிலையில் உள்ளது இந்தியா. ‘உலக அளவில் கவலைமிக்க நாடுகளின் பட்டியலில் 45 நாடுகள் உள்ளன. அதில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

கழிவறை
கழிவறை

ஆறு மாதம் முதல் 23 மாதமான 9.6 சதவிகித இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள், போதுமான உணவு உட்கொள்ள முடியாமல் உள்ளனர். 2015-16-ம் ஆண்டு வெளியான தகவலுடன் இந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்தியாவைச் சேர்ந்த 90% வீடுகளில் தூய்மையான குடிநீர் பயன்படுத்தப்படுகிறது. 39% வீடுகளில் இன்னும் கழிவறைகள் இல்லை’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இந்தியா முழுவதும் கழிவறை இல்லாத வீடுகளில் இலவசமாகக் கழிவறை கட்டித்தரப்படும்’ என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை, நடைமுறையில்தான் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் வங்க தேசம் ஆகிய இரு நாடுகளும் பட்டினியாக இருக்கும் மக்களுக்கு ஆதரவாகப் போராடி வருகின்றன.

இந்தியா மக்கள் தொகை
இந்தியா மக்கள் தொகை

இந்த உலகளாவிய பட்டினி தொடர்பான பட்டியலில் 2015-ம் ஆண்டு 93-வது இடத்திலிருந்த இந்தியா இந்த வருடம் 102-வது இடத்துக்குச் சென்றுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதும் இந்த நிலைக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.