Published:Updated:

`அண்டை நாட்டவருக்கு உதவ இந்தியா தயாராக இருந்தது!’ - கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து ஜெய்சங்கர்

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்

சீனாவில் உள்ள இந்திய மாணவர்களுடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா அரசு தடுமாறிவருகிறது. மருத்துவத்துறைக்குப் பெயர்போன வுகான நகரத்தில் இருந்து இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்படுகிறது. வுகான் நகரம் மருத்துவ மாணவர்களின் சொர்க்கபுரியாகப் பார்க்கப்படுகிறது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மருத்துவ மாணவர்கள் வுகானில் மருத்துவம் பயின்று வருகின்றனர். இதன்காரணமாகவே கொரோனா தாக்கம் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களை அச்சமடைய வைத்துள்ளது.

இந்தியாவின் சிறப்பு விமானம்
இந்தியாவின் சிறப்பு விமானம்

சீனாவில் சிக்கித்தவிக்கும் இந்திய மாணவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் மானேசரில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு மருத்துவப் பரிசோதனைகள் நடந்து வருகின்றன. 14 நாள்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு, அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பா.ஜ.க நியமன எம்.பி ரூபா கங்குலி கேள்வி எழுப்பியிருந்தார்.

`மாஸ்க் ஏற்படுத்திய வடுக்கள்; அயராத சேவை!' - செவிலியர்களை தேவதைகளாகக் கொண்டாடும் சீனா #Corona

இதற்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``இந்திய அரசாங்கம் இரண்டு சிறப்பு விமானங்களை சீனாவுக்கு அனுப்பியது. வுகான் மாகாணத்தில் சிக்கியிருந்த இந்தியர்கள் மட்டுமல்லாமல் அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களையும் அழைத்து வர திட்டமிட்டிருந்தோம். இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தோம். மாலத்தீவுகளைச் சேர்ந்த 7 பேர் வருவதற்கு விருப்பம் தெரிவித்தனர். 638 இந்தியர்கள் மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த 7 பேரை அழைத்து வருவதற்காக இரண்டு விமானங்கள் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டன.

கொரோனா
கொரோனா

இந்தியாவைச் சேர்ந்த 80 பேர் சீனாவிலேயே இருப்பதாகத் தெரிவித்துவிட்டனர். இந்தியாவுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. அவர்களைச் சேர்த்து மொத்தம் 80 பேர் சீனாவில் உள்ளனர். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு