Published:Updated:

`மின் பயன்பாட்டுக்கு ப்ரீபெய்டு கட்டணம்!'- செயல்பாட்டுக்கு வந்தால் என்னவாகும்? #MyVikatan

தமிழ்நாடு முழுவதும் பழைய மின்சார சக்கர மீட்டரை மாற்றிவிட்டு புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. அடுத்தகட்டமாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட உள்ளதாம்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

``உலகத்துக்கு என்ன தேவை என்று முதலில் கண்டுபிடிக்கிறேன். பிறகு அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் கருவிகளைக் கண்டுபிடிக்கிறேன்'' என்றார் எடிசன்.

மக்களின் தேவையும் அதற்கேற்ற கருவிகளும் காலமாற்றத்திற்கேற்ப கண்டறிந்து கொண்டுதான் இருக்கிறோம். அக்கண்டுபிடிப்பின் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பயன்படுத்துகிறோம்.

ஒரு காலத்தில் விளக்கொளியில் இருந்துதான் மின்சாரத்தின் வழியே புதிய உலகம் கண்டோம். நினைவு தெரிந்த நாள் முதல் ``மின்சிக்கனம் தேவை இக்கணம்" எனப் பார்க்காத கண்களே இருக்காது. இதைச் செயலாக்க தற்போது வந்துவிட்டது மின் மீட்டர்கள்.

Representational Image
Representational Image

மின்துறையில் நவீன தொழில்நுட்ப வசதிகளைப் புகுத்தும் நடவடிக்கைகளை மத்திய மின்வாரியத்துறை ஏற்கெனவே மேற்கொண்டு வருகிறது. மின் திருட்டு, மின் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்தாமல் இழுத்தடிப்பது போன்ற காரணங்களால் இத்துறைக்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதில் உள்ள குறைபாடுகளைத் தவிர்க்க மின்துறையில் கணினி தொழில்நுட்பங்கள் அதிகளவில் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்தக் கறுப்பு வண்ணத்தில் இருக்கும் மின் மீட்டர்கள் அகற்றப்பட்டன. ஏனெனில் இதில் காந்தம் ஒட்டி நிறுத்தி வைப்பது, ஓடாத மீட்டர் எனப் பல தகாத செயல் அரங்கேறவே அடுத்து.. எலெக்ட்ரானிக் மின் மீட்டர்கள் பொறுத்தப்பட்டன. தற்போது இன்னும் அட்வான்ஸாக அடுத்து டிஜிட்டல் மின்மீட்டர் ப்ரீபெய்டு சிஸ்டம் வர உள்ளது.

#கணக்கெடுப்பு

மின் கணக்கீட்டுப் பணி மின்சார வாரியத்தின் முக்கியப்பணியாகும்.

களப்பணியாளர்கள் வீடுவீடாக கணக்கெடுத்து தொகையை வீட்டின் அட்டையில் குறித்து வருவார்கள்.

நுகர்வோரும் இரு மாதத்துக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்தி வந்தனர். ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவோ அல்லது கணக்கெடுக்க வரவில்லை என்றாலோ முந்தைய கட்டணத்தையே மக்கள் கட்டி வந்தனர். இதில் பல நிறுவனங்கள் முறைகேடு செய்த காரணத்தால் மின் வாரியம் நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் வந்தது. எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மின்வாரியம். இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது எளிமையாகிவிடும். மின் வாரிய ஊழியர்களின் வேலைப்பளுவும் குறையும்.

Representational Image
Representational Image

#மின்சார மசோதா

2003-ம் ஆண்டு கொண்டுவரப் பட்ட புதிய மின்சார மசோதாவுக்கு அப்போது மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறைவேறவில்லை. பின் 2014-ம் ஆண்டு மின்சார மசோதா சட்டமாக்கப்பட்டது. மின் பகிர்மானம் தொடர்பாக 2015-ம் ஆண்டு உதய் எனும் உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனா திட்டம் முதலில் தமிழகம் தவிர்த்து 18 மாநிலங்களில் வந்தது. பின் 2016-ம் ஆண்டு தமிழகமும் இதில் இணைந்தது.

#ஸ்மார்ட் மின் மீட்டர்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வீடு மற்றும் கடைகளிலும் பழைய மின்சார சக்கர மீட்டரை மாற்றிவிட்டு புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றப்பட்டது. அடுத்தகட்டமாக ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்படும். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அலைபேசிக்கு எவ்வாறு மாதக்கணக்கிலோ அல்லது தேவைப்படும் நாள்வரை ரீசார்ஜ் செய்வதுபோல் செய்துகொண்டால் அத்தொகைக்கான மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த டிஜிட்டில் மின் மீட்டரை குடியிருப்புகளில் பொருத்திய பின் குறிப்பிட்ட காலத்துக்குள் மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் வாரிய ஊழியர் வந்து கட்டையைப் பிடுங்கிச் செல்லமாட்டார். அந்த மின் மீட்டர் தானாக மின் சப்ளையை நிறுத்திவிடும். பணம் செலுத்திய பின்னர்தான் மீண்டும் மின் விநியோகம் தொடங்கும். கணக்கெடுப்பவர் இனி வரமாட்டார். பணமில்லா பரிவர்த்தனையை நுகர்வோர் மின் கட்டணமாக செலுத்திக் கொள்ளலாம்.

Representational Image
Representational Image

#ப்ரீபெய்டு மீட்டர்

நாடு முழுவதும் ப்ரீபெய்டு மீட்டர் கொண்டு வருவதன் மூலம் மின்சாரத்துக்குச் செலுத்தப்படும் கட்டணம், வசூல் ஆகியவை சீராகும்.

காலம் கடத்துதல், மின் ஏய்ப்பு இதன் மூலம் செய்ய முடியாது.

குறிப்பிட்ட தேதிக்குள் மின்சாரக் கட்டணம் செலுத்த ஒரு நிமிடம் தாமதித்தாலும், மின் இணைப்பு தானாகவே துண்டிக்கப்படும் வகையில் கணினியில் பதிவுகள் செய்யப்படும். அதேபோல் மின் கட்டணம் செலுத்தியதும், மின் இணைப்பு கிடைத்துவிடும். முன்கூட்டியே கட்டணம் செலுத்தியும், அதற்கேற்ப மின்சாரம் பயன்படுத்திக் கொள்ளலாம். மின் நுகர்வோரின் செல்போன் எண்களும் கணினியில் பதிவு செய்யப்படும். இதன்மூலம் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்கள்? என்பது உள்ளிட்ட விவரங்களை செல்போனிலேயே அறிந்துகொள்ள முடியும். கட்டணம் செலுத்த வேண்டிய விவரங்கள் உட்பட அனைத்தும் செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும்.

#மின் மீட்டரின் பணிகளில்,

*ஜீரோ வாட்ஸ் பல்பு ஒளிர்தலை கூட துல்லியமாய்க் கணக்கிடும்.

*மொபைல் சார்ஜ் இரவு நேரங்களில் போட்டுவிட்டு விடிய விடிய ஆனில் இருந்தாலும் மின்கட்டணம்தான்.

Representational Image
Representational Image

*டிவி'யை ரிமோட்டில் ஆப் செய்தாலும் ஸ்விட்ச் ஆப் செய்யாமல் ஸ்டெபிலைசர் ஆனில் இருந்தாலும் அதற்குரிய ரீடிங்கை துல்லியமாக கணக்கிட்டுக் கொள்ளும்.

*அவசியமின்றி மின்சாரத்தை விரயம் செய்தால், நாமே பொறுப்பாக முடியும்.

சிக்கனமாய் பயன்படுத்தவில்லையெனில் அதற்கான கட்டணத்தை நாம்தான் செலுத்த வேண்டும். இதனால் நாம் யாரும் சொல்லாமலேயே மின்சாரத்தை வீணாக்க மாட்டோம்.

#சில சந்தேகங்கள்

*தற்போதிருக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்னவாகும் எனத் தெரியவில்லை. விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரம் குறித்தும் சந்தேகங்கள் எழுகின்றன.

*மனிதர்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் வந்துவிட்டால் மின் வாரியத்தில் வேலை இழப்பு அதிகரிக்கும்.

*தனியார் நிறுவனங்கள் இதில் உள் நுழையும் வாய்ப்பு வரலாம்.

*சீரான கட்டணம் இல்லாமல் ப்ரிபெய்டு பில் என்பதால் திடீரென மின் கட்டணத்தை உயர்த்தும் அபாயமும் உள்ளது.

*தொழில்நுட்பக் கோளாறுகள் வர நேரலாம். நாளடைவில் அது சரியாகலாம்.

Representational Image
Representational Image

#நன்மைகள்

நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியம் இழப்பை சரிக்கட்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மின் வாரியம் மூலம் கூடுதல் வருமானம் வரும். மின் வாரியம் அனைத்தையும் எளிதில் கண்காணிக்கலாம். மின்சாரத்தை தேவையின்றி அநாவசியமாய் பயன்படுத்தல் குறையும். காலம் கடத்திச் செலுத்தும் மின் கட்டண பிரச்னையிலிருந்து விடுபட முடியும்.

அனைத்து மக்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதே அரசின் கடமை. அதை நிறைவேற்றுவோம் என நம்புவோமாக.

``கண்காணிக்கப்படுகிறோம் என்ற எண்ணம் இருந்தால்தான் தவறு செய்வதற்கான பயம் இருக்கும்."

இதை விழிப்புணர்வாய் எடுத்துக்கொண்டால் எப்போதும் மின் மிகை மாநிலமாய் தமிழகம் ஒளிரும்

-மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு