Published:Updated:

பிபின் ராவத் ஐம்பொன் சிலையை ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம் - தமிழகத்தின் பரிசுக்குக் குவியும் பாராட்டு!

பிபின் ராவத் ஐம்பொன் சிலை

பிபின் ராவத், இந்திய ராணுவத்தில் இணைந்தது முதல் அவர் ஆற்றிய பன்முகத்தன்மை கொண்ட பங்களிப்புகள் குறித்த அற்புதமான ஆவணப்படக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.

பிபின் ராவத் ஐம்பொன் சிலையை ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம் - தமிழகத்தின் பரிசுக்குக் குவியும் பாராட்டு!

பிபின் ராவத், இந்திய ராணுவத்தில் இணைந்தது முதல் அவர் ஆற்றிய பன்முகத்தன்மை கொண்ட பங்களிப்புகள் குறித்த அற்புதமான ஆவணப்படக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.

Published:Updated:
பிபின் ராவத் ஐம்பொன் சிலை

கடந்த சனிக்கிழமையன்று மாலை புது டெல்லியிலுள்ள USI ராணுவ வளாகத்தில் இந்தியத் தேசிய ராணுவத்தின் முன்னாள் முதன்மைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் முதலாமாண்டு நினைவு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் தலைமை வகித்தார். மேஜர் ஜெனரல் ஷர்மா வரவேற்புரை ஆற்றினார். ராணுவ முதன்மைத் தளபதி ஜெனரல் மனோஜ்பாண்டே, முப்படைத்தளபதி ஜெனரல் அனில் சௌகான், கடற்படை முதன்மைத் தளபதி அட்மிரல் ஹரிகுமார், விமானப்படை முதன்மைத் தளபதி ஏர் மார்ஷெல் சௌத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பிபின் ராவத்தின் நெருங்கிய நண்பரும், ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான ஷர்மா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.

பிபின் ராவத் ஐம்பொன் சிலை
பிபின் ராவத் ஐம்பொன் சிலை

கூட்டம் தொடங்குவதற்கு முன் USI வளாகத்தில் கும்பகோணத்தில் தயார்செய்யப்பட்டு கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நல சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலையை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் திறந்து வைத்தார்.

அத்துடன் பிபின் ராவத், இந்திய ராணுவத்தில் இணைந்தது முதல் அவர் ஆற்றிய பன்முகத்தன்மை கொண்ட பங்களிப்புகள் குறித்த அற்புதமான ஆவணப்படக் காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டது.

கூட்ட நிகழ்வில் ஜெனரல் பிபின் ராவத் ஐம்பொன் திருவுருவச்சிலையை தன்னார்வமாக அரும்பாடுபட்டுச் செய்து, ராணுவத்திற்கு நினைவுப் பரிசாக அளித்த சிலை நிர்மாணக்குழுத் தலைவரும், கடலூர் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சமூக நல அமைப்பின் தலைவருமான பாபு, ஆலோசகர் மற்றும் குடந்தை அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பு செயலாளர் சத்தியநாராயணன், துணைத்தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பிபின் ராவத் சிலையை அற்புதமாக வடிவமைத்த சிற்பி கும்பகோணம் இராம்குமார் ஸ்தபதி ஆகியோரை மேடைக்கு அழைத்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சிலை நிர்மாணக்குழு சார்பில் பிபின் ராவத் மகள் கிருத்திகாவிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பிபின் ராவத் ஐம்பொன் சிலையை ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம்
பிபின் ராவத் ஐம்பொன் சிலையை ஏற்றுக்கொண்ட இந்திய ராணுவம்

தமிழக மக்களின் ஒட்டுமொத்த அன்புப் பரிசாக வழங்கப்பட்ட பிபின் ராவத் ஐம்பொன் சிலையை இந்திய ராணுவம் ஏற்றுக்கொண்டதும், மகிழ்ந்து நன்றி தெரிவித்ததும், பகலிரவு பாராமல், உயிருக்கு அஞ்சாமல், எந்நேரமும் தேசம் காக்கும் லட்சோப லட்சம் படைவீரர்களுக்கு உற்சாகமளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.