Published:Updated:

கார்கில்: பனிமலை நடுவே பொங்கல்வைத்துக் கொண்டாடிய ராணுவ வீரர்கள்... வைரல் வீடியோ!

கார்கில் பனிமலை
News
கார்கில் பனிமலை

இந்திய எல்லையான கார்கில் பகுதியிலுள்ள பனிமலை நடுவே ராணுவ வீரர்கள் பொங்கல் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழர் திருநாளான தை முதல் நாள் நேற்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, புதுப்பானையில் பொங்கல்வைத்து, புத்தரிசியில் பொங்கல்வைத்து சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும்விதமாக பொங்கல்வைத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் கார்கில் பகுதியிலுள்ள பனிமலை நடுவே பொங்கல் கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. அத்துடன் இந்திய எல்லையான, கார்கில் பகுதியிலுள்ள பனிமலையில் ராணுவ வீரர்கள் பொங்கல் பானை வைத்து, தேங்காய், பழம் உள்ளிட்ட பொருள்களை வைத்து தமிழர்களின் பாரம்பர்ய முறைப்படி பொங்கல் கொண்டாடியுள்ளனர். மேலும், ராணுவ வீரர்கள் `ஹேப்பி பொங்கல்’ என்று கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.