Published:Updated:

`அனைத்துக்கும் என் மனைவிதான் காரணம்’ - ஒரே லாட்டரியில் கோடீஸ்வரன் ஆன விவசாயி!

சத்யா கோபாலன்

`தயவுசெய்து எனக்கு போன் செய்யுங்கள். நான் நாளையே வந்து பணத்தைப் பெற்றுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார் ரிக்காலா.

ரிக்காலா
ரிக்காலா ( Gulf News )

தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத் மாவட்டத்தில் உள்ள ஜாக்ரன்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிக்காலா. தன் கிராமத்தில் சரியான வேலை கிடைக்காததால் இவர் துபாய்க்கு வேலை தேடிச் சென்றுள்ளார். அங்கு கால்டாக்ஸி டிரைவராக பணியாற்றி வந்த ரிக்காலா அது பிடிக்காமல் வேறு வேலை தேடியுள்ளார். எதுவும் சரிவராததால் கடந்த 45 நாள்களுக்கு முன்னர் தன் கிராமத்துக்கே திரும்பி வந்து விவசாயம் செய்துவந்துள்ளார்.

டாக்ஸி
டாக்ஸி
Dubai taxi

ஊருக்குத் திரும்பும் முன்னர் துபாயில் ரஃப்லே லாட்டரி சீட்டுகளை ரிக்காலா வாங்கியுள்ளார். மேலும், துபாய் ஷாப்பிங் ஸ்பெஷல் லாட்டரி டிக்கெட் ஒன்றும் வாங்கியுள்ளார். தற்போது அந்த லாட்டரி சீட்டுக்கு 4.08 மில்லியன் டாலர் பரிசு விழுந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.28,43,32,500 கோடி ரூபாய். ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் ஈட்டி வந்த ரிக்காலா ஒரே லாட்டரியில் கோடீஸ்வரன் ஆகியுள்ளார்.

இது பற்றி கல்ஃப் ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள ரிக்காலா, ``துபாயிலிருந்து இந்தியா திரும்பி வருவதற்குக்கூட என்னிடம் பணம் இல்லை. ஆனால், லாட்டரி வாங்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. என் விருப்பத்தை மனைவியிடம் கூறியபோது, அவர் எதுவும் பேசாமல் தான் சேர்த்து வைத்திருந்த 20,000 ரூபாயை என்னிடம் தந்தார். அதை வைத்துதான் நான் லாட்டரி வாங்கினேன். இப்போது எனக்குக் கிடைத்துள்ள அனைத்துக்கும் என் மனைவி பத்மாவே முழு காரணம். தற்போது கிடைத்துள்ள இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு என் கிராமத்திலேயே விவசாயம் செய்யப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

துபார் லாட்டரி
துபார் லாட்டரி
Gulf News

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நகரங்களில் நடக்கும் லாட்டரி குலுக்கல்களில் அதிகமாக இந்தியர்களே பரிசு பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.