Published:Updated:

`கொரோனாவுக்கு எதிரான போர்!’ - அரசுக்கு வலுசேர்க்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்

வென்டிலேட்டர்
வென்டிலேட்டர்

இந்தியாவில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது இந்திய அரசு. தற்போதுவரை இந்தியாவில் 700 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா
கொரோனா

அரசுதரவின்படி இந்தியாவில் 1,500 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை உள்ளது. உலக சுகாதார நிறுவனம் 1,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை இருக்க வேண்டும் எனக் கூறுகிறது. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே சார்ந்துள்ளனர். இந்தக் கணக்கீட்டின்படி பார்த்தால் 10,000 நபர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைதான் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிக பாதிப்புக்கு உள்ளான நாடு... சீனாவை விஞ்சிய அமெரிக்கா! -அச்சத்தில் மக்கள் #Corona

அதேபோல் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 1,00,000 பேருக்கு 2.3 என்ற நிலைதான் உள்ளது. சீனாவில் இது 3.6-ஆக இருப்பதாகவும் அமெரிக்காவில் 1,00,000 மக்களுக்கு 35 என்ற நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் எத்தனை வென்டிலேட்டர் வசதிகள் இருக்கின்றன என்ற தகவலை அரசு வெளியிடவில்லை. `நாடு முழுவதும் 30,000-ல் இருந்து 40,000 வென்டிலேட்டர்கள் இருக்கலாம்’ என ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

கொரோனா
கொரோனா

இந்தியாவில் இக்கட்டான சூழல் ஏற்பட்டால் மக்களைக் கவனித்துக்கொள்ள போதுமான பயிற்சிபெற்ற சுகாதாரப் பணியாளர்கள் இருக்கிறார்களா.... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் சப்ளை கிடைப்பதற்கான வசதிகள் இருக்கிறதா எனக் கேள்வி எழுப்புகின்றனர் மருத்துவர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகப்படியான வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்வதற்கான பணிகளில் இந்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து, பல்வேறு தொழிற்துறை நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. அதேபோல் மருந்துப் பொருள்களுக்கான ஏற்றுமதியில் பல்வேறு திருத்தங்களை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. வென்டிலேட்டர்கள், செயற்கை சுவாசக் கருவிகள், ஆக்சிஜன் தெரபி கருவிகள், சானிடைஸர்களின் ஏற்றுமதிக்கு அரசு தடைவிதித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.

 `கொரோனாவுக்கு எதிரான போர்!’ - அரசுக்கு வலுசேர்க்கும் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள்
’தூக்கத்தை தொலைத்தேன்; அந்த கண்களில் பயத்தைக் கண்டேன்!’-அமெரிக்கா நிலையை விளக்கும் செவிலியரின் பதிவு

கொரோனா வைரஸால் பாதிப்படையும் நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. இதையடுத்து, அவர்கள் வென்டிலேட்டர்களில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இதன்காரணமாக தான் அரசு வென்டிலேட்டர் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மருந்து சாதன உற்பத்தி நிறுவனங்களிடம் ஏப்ரல் 1-ம் தேதி கிடைக்கக் கூடிய வென்டிலேட்டர்கள் குறித்த தகவல்களும் உற்பத்தியாளர்களிடம் இதுவரை எவ்வளவு இருப்பு உள்ளது என்ற தகவல்களும் கேட்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைப் பொறுத்து மேலும் கூடுதலாக உற்பத்தி செய்ய கேட்டுக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

அரசின் கோரிக்கையை ஏற்று மகேந்திரா நிறுவனம் வென்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மலிவான விலையில் உயிர்காக்கும் கருவிகளைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். தற்போது அதற்கான பணிகளையும் அந்நிறுவனம் தொடங்கிவிட்டது.

கொரோனா
கொரோனா

அதேபோல் வென்டிலேட்டர்களைச் செய்யவதற்காக ஆந்திராவில் உள்ள AMTZ (Andhra Pradesh MedTech Zone) உற்பத்தியாளர்களுக்கு நிதிவழங்குவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. `அரசுக்கு எந்த வகையில் எங்களால் உதவ முடியுமோ நாங்கள் அதைச் செய்வோம்’ என பஜாஜ் குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. DRDO (The Defence Research and Development Organisation) அமைப்பும் வென்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணியில் இறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு