Published:Updated:

ஆரஞ்ச் அலர்ட்: 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்!

கோடை வெயில்

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்துவருகிறது.

ஆரஞ்ச் அலர்ட்: 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட மாநிலங்களில் சுட்டெரிக்கும் வெயில்!

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயில் சுட்டெரித்துவருகிறது.

Published:Updated:
கோடை வெயில்

நாட்டில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருந்துவருகிறது. டெல்லி மற்றும் அதை ஒட்டியிருக்கும் குருகிராமில் 45 டிகிரியைத் தாண்டி பகலில் வெயில் கொளுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இந்த அளவுக்கு 1979-ம் ஆண்டுதான் வெயில் அதிகமாக இருந்தது. உத்தரப்பிரதேசத்தின் அலாகாபாத்திலும் 45.5 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருக்கிறது. இதே போன்று மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவிலும் வெயிலின் தாக்கம் 45 டிகிரிக்கும் அதிகமாக இருக்கிறது. வெப்பம் அதிகரித்திருப்பதால் எப்போதும் இல்லாத அளவுக்கு மின் தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மின் உற்பத்தி மையத்துக்கு நிலக்கரியை விரைவாக எடுத்துச் செல்வதற்காக நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருக்கிறது.

வெயில்
வெயில்

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நிலக்கரி ஓரிரு நாள்களுக்கு மட்டும்தான் கையிருப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவின் விதர்பா போன்ற பகுதிகளில் வெயில் தாக்கம் தொடர்பாக நான்கு நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வட மேற்கு, மத்திய இந்தியாவில் அடுத்த நான்கு நாள்களுக்கும், கிழக்கு இந்தியாவில் அடுத்த இரண்டு நாள்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டைவிட்டு வெளியில் வரவே பயப்படுகின்றனர். சமூக வலைதளத்தில் தேவ்யானி கோலி என்பவர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில் திருமண ஊர்வலம் ஒன்று வெயிலில் சென்றுகொண்டிருந்தது. நடமாடும் பந்தல் ஒன்று அமைத்து அதில் திருமண ஊர்வலம் சென்றது. நடமாடும் பந்தலுக்கு கீழே குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலமாகச் செல்கிறார். அந்த நடமாடும் பந்தலுக்குக் கீழே திருமணத்துக்கு வந்தவர்கள் நடனமாடியவாறு சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism