Published:Updated:

இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்கள்!-வானில் நடந்தது என்ன?

இந்திய விமானத்தின் விமானி, இது ஒரு பயணிகள் விமானம் என்று விமானம் குறித்த தகவல்களை அளித்தார். இதைத் தொடர்ந்து அது பயணிகள் விமானம் என்பதை உறுதி செய்தது பாகிஸ்தான்!

F16
F16

பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஒரு தகவல் பறக்கிறது. `இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் வான்வழியில் பறக்கிறது. உடனே குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லுங்கள்’ என பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எஃப் -16 ரக போர் விமானங்களை அனுப்பியது.

Spicejet
Spicejet

எனினும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அதில் குழப்பம் இருந்தது. காரணம், குறிப்பிட்ட அந்த விமானம் வெளியிடும் சமிக்ஞை, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் என்பதை காட்டுகிறது. ஆனால், விமானத் திட்டத்தின் படியும் விமானியின் எண் அடிப்படையிலும் அது ஒரு பயணிகள் விமானம். குழப்பம் நீடித்ததால் பரபரப்பும் நீடித்தது.

இந்நிலையில் இந்திய விமானத்தை நெருங்கிய பாகிஸ்தான் போர் விமானம் தாழ்வான உயரத்தில் பறக்கும்படியும், விமானத்தின் தகவலைத் தரும்படியும் ஆணையிட்டது. இதைத் தொடர்ந்து இந்திய விமானத்தின் விமானி, இது ஒரு பயணிகள் விமானம் என்றும் விமானம் குறித்த தகவல்களை அளித்தார். இதைத் தொடர்ந்து அது பயணிகள் விமானம் என்பதை உறுதி செய்த பாகிஸ்தான், குறிப்பிட்ட அந்த விமானம் பாகிஸ்தான் எல்லையைக் கடக்கும் வரை சுமார் 30 நிமிடங்கள் உடன் சென்று பின் திரும்பியது.

இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்கள்!-வானில் நடந்தது என்ன?

இந்த பரபர சம்பவம் நடைபெற்றது செப்டம்பர் 23. உண்மையில் பாகிஸ்தான் வான்பகுதியில் பறந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்குச் சொந்தமான பயணிகள் விமானம். குறிப்பிட்ட அந்த விமானம் டெல்லியிலிருந்து காபூல் நகருக்கு 120 பயணிகளுடன் பயணமாகியுள்ளது. ஆனால், அது அந்த விமானத்தின் சிக்னல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமானது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரக அதிகாரிகள், ``குறிப்பிட்ட இந்த விமானம் முன்னதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இருந்துள்ளது. பின்னர் இதை வாங்கிய ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதைப் பதிவு செய்வதற்காக இந்திய டி.ஜி.சி.ஏ என்னும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்துக்கு கொண்டு வந்துள்ளனர். சர்வதேச விமான போக்குவரத்து ஆணையத்தின் விதிப்படி, ஒரு விமானத்தைப் பதிவுசெய்யும்போது அவற்றுக்கு 23 இலக்குகள் கொண்ட ஒரு ஆல்பா- எண்னை வழங்கும். அந்த `கோட்’-ஐ சமிக்ஞையாக விமானம் ட்ரான்ஸ்மிட் செய்யும். இந்த எண்ணுக்கு மோட்-எஸ்(Mode-S) என்று பெயர்.

இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்கள்!-வானில் நடந்தது என்ன?

இப்படி குறிப்பிட்ட இந்த விமானத்தைப் பதிவு செய்யும்போது இந்திய சிவில் ஏவியேஷன் இயக்குநரகத்தில் பணியாற்றும் ஒருவர் தவறுதலாக இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என் -32 என்னும் விமானத்துக்கு வழங்க வேண்டிய எண்ணை தவறுதலாக இந்த விமானத்துக்கு வழங்கியுள்ளார். இதனாலே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமாக அந்த அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

இந்த விவகாரத்தை அமைதியாகவும் பொறுமையாகவும் கையாண்ட பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு இந்திய விமானத்துறை செயலாளர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து விமானங்களுக்குப் பதிவு எண்களை வழங்கும் முறையை கணினிமயமாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது விமானத்துறை. இதற்கான பணி டி.சி.எஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக மோடு-எஸ் சிக்னலை எந்த நாடும் டிராக் செய்யமாட்டார்கள். ஆனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே காஷ்மீர், எல்லை பிரச்னை, பால்கோட் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகள் உச்சத்தில் இருந்ததால் இந்த விமானத்தின் மோட்-எஸ் சிக்னலை ட்ராக் செய்துள்ளனர். அதில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் என்று தெரிய வந்தாலும் மற்ற குழப்பங்கள் காரணமாக அமைதியாகச் செயல்பட்டுள்ளனர். மேலும், குறிப்பிட்ட விமானத்தைப் பயணிகள் விமானம் என்று உறுதி செய்ததும் ஆப்கானிஸ்தான் எல்லை வரைக்கும் சென்று வழியனுப்பி உள்ளனர். இந்தியப் பயணிகள் விமானத்தை ஓட்டிய விமானி 12 வருட அனுபவம் கொண்டவர். இதனால் அவர் பதற்றமடையாமல் விமானத்தை இயக்கியுள்ளார் என்கிறார் மற்றோர் அதிகாரி.

இந்தியப் பயணிகள் விமானத்தைச் சுற்றிவளைத்த பாகிஸ்தானின் எஃப்16 போர் விமானங்கள்!-வானில் நடந்தது என்ன?

இந்நிலையில் இந்த விமானம் காபூலுக்குச் செல்லும் முன், கொழும்பு மற்றும் பாங்காக் ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்துள்ளது. ஆனால், அப்போது யாரும் இந்த எண் குழப்பத்தைக் கணிக்கவில்லை. பாகிஸ்தான், பயணிகள் விமானம் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து காபூலிலிருந்து அந்த விமானம் டெல்லி திரும்பும்போது அதற்கான அனுமதி பாஸை அளித்துள்ளது. இந்தச் சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.