Published:Updated:

75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களைச் சந்தித்த பெண்; நெகிழ வைத்த பஞ்சாப் நிகழ்வு!

Old Woman (Representational Image) ( Photo by Danie Franco on Unsplash )

மும்தாஜ் பீபி சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இந்திய பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறையால் கலகக்காரர்கள் இவரின் தாயைக் கொன்றனர்.

75 ஆண்டுகளுக்குப் பின் சகோதரர்களைச் சந்தித்த பெண்; நெகிழ வைத்த பஞ்சாப் நிகழ்வு!

மும்தாஜ் பீபி சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இந்திய பிரிவினையின் போது ஏற்பட்ட வன்முறையால் கலகக்காரர்கள் இவரின் தாயைக் கொன்றனர்.

Published:Updated:
Old Woman (Representational Image) ( Photo by Danie Franco on Unsplash )

சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், 75 ஆண்டுகள் கழித்து தன் இந்திய சகோதரர்களைச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மும்தாஜ் பீபி சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட வன்முறையால் கலகக்காரர்கள் இவரின் தாயைக் கொன்றனர். அவரின் தாய் கொல்லப்பட்ட போது மும்தாஜ் பீபி கைக்குழந்தை. அந்தக் குழந்தையைத் தத்தெடுத்த முஹமது இக்பால் மற்றும் அல்லா ராக்கி தம்பதியர், மும்தாஜ் பீபி எனப் பெயர் வைத்து சொந்த மகளாகவே வளர்க்கத் தொடங்கினர். இந்திய பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், ஷேகுபுரா மாவட்டத்தில் உள்ள வரிகா தியான் கிராமத்தில் இவர்கள் குடியேறினர்.

Old Woman (Representational Image)
Old Woman (Representational Image)
Photo by Danie Franco on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இக்பாலும் அவரின் மனைவியும் மும்தாஜ் வளர்ப்பு மகள் என்பதைச் சொல்லாமலேயே வளர்த்து வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இக்பாலின் உடல்நிலை மோசமடையவே, அவரின் மனைவி, மும்தாஜிடம் உண்மையைச் சொல்லியுள்ளார்.

இக்பாலின் மரணத்துக்குப் பிறகு, மும்தாஜ் மற்றும் அவரின் மகன் ஷாபாஸ் இருவரும் சமூக ஊடகங்கள் மூலம் அவரின் குடும்பத்தாரைத் தேடத் தொடங்கினர். அதிர்ஷ்டவசமாக மும்தாஜின் தந்தையின் பெயரும், பஞ்சாபின் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள கிராமமும் நினைவில் இருந்ததால் அதை வைத்துத்தேடத் தொடங்கியுள்ளனர். இந்தத் தேடல் இரு குடும்பத்தினர்களையும் இணைத்துள்ளது.

மும்தாஜின் சகோதரர்கள் குருமீத் சிங், நரேந்திர சிங் மற்றும் அம்ரீந்தர் சிங் ஆகியோர் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிபை அடைந்தனர். அங்கு வந்த மும்தாஜ், 75 ஆண்டுகளுக்குப் பிறகு, தன் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism