Published:Updated:

மன அழுத்தம் குறைக்க மீம்ஸ்; தினமும் நேரம் ஒதுக்கும் இந்தியர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

vadivelu meme template

நாளுக்கு நாள் சமூகவலைதளங்களில் அதிகரித்துவரும் இந்த மீம்ஸிற்கு என்று ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

மன அழுத்தம் குறைக்க மீம்ஸ்; தினமும் நேரம் ஒதுக்கும் இந்தியர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

நாளுக்கு நாள் சமூகவலைதளங்களில் அதிகரித்துவரும் இந்த மீம்ஸிற்கு என்று ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

Published:Updated:
vadivelu meme template

சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கப்படும் பல விஷயங்களில் மீம்ஸும் ஒன்று. பெரும்பாலான மக்கள் மீம்ஸ் பார்த்துதான் தங்களின் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்கிறார்கள். பலர் தங்களின் வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களை மீம்ஸ் உடன் கனெக்ட்டும் செய்துகொள்கிறார்கள். நாளுக்கு நாள் சமூகவலைதளங்களில் அதிகரித்துவரும் இந்த மீம்ஸிற்கு என்று ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இப்படி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, மீம்ஸைப் பார்ப்பதற்கு இந்தியாவில் மட்டும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் தினமும் அரை மணி நேரம் ஒதுக்குவதாக ரெட்ஷீர் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மன அழுத்தம் குறைக்க மீம்ஸ்; தினமும் நேரம் ஒதுக்கும் இந்தியர்கள்; ஆய்வில் வெளியான தகவல்!

அந்த ஆய்வில், பெரும்பாலான மக்கள் தங்களது மன அழுத்தத்தைப் போக்குவதற்காக மீம்ஸ் பார்ப்பதாகவும், குறிப்பாக பொழுதுபோக்குத் துறையில் மீம்ஸ்கள் உச்சத்தில் இருப்பதாகவும் கூறுகிறது. இதுமட்டுமன்றி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு மீம்ஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 80 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், பொழுதுபோக்குத் துறையில் இப்போது மீம்ஸ்கள்தான் உச்சத்தில் இருக்கிறது என்றும் இதனால் மீம்ஸ்களை உருவாக்க உதவும் தளங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அறிவித்திருக்கின்றனர்.

மீம்ஸைப் பார்க்கும் பார்வையாளர்களில் 90 சதவிகிதம் பேர் மீம்ஸ் கிரியேட்டர்களாகவே மாறிவிடுவதாகவும் மீம்ஸ்களைப் பகிர்வதன் மூலம் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள முடியும் என மக்கள் நம்புவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. இதனால் மீம்ஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது என்று ஆய்வை நடத்திய ரெட்ஷீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.