Published:Updated:

விக்ரம்; இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்

'விக்ரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

விக்ரம்; இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

'விக்ரம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்கள்!

Published:Updated:
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்

இந்தியாவிலிருந்து இதுவரை விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்கள் அனைத்தும் பொதுத்துறையினது ஆகும். தற்போது, ஹைதராபாத்தைச் சேர்ந்த 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' என்ற தனியார் நிறுவனம் 'விக்ரம்- எஸ்' என்ற ராக்கெட்டைத் தயாரித்திருக்கிறது. இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி 'விக்ரம் சாராபாய்' அவர்களை நினைவு கூறும் வகையில் ஸ்கைரூட்டின் ஏவுகணைகளுக்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்

இந்தியாவில் தனியார் துறையைச் சேர்ந்த ஒருநிறுவனம் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்துவது இதுதான் முதல்முறை. ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் திட்டத்திற்கு பிரரம்ப்(தொடக்கம்) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் 3 விதமான பேலோடுகள் உள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. 'விக்ரம்' ராக்கெட்டின் மூன்று வகைகளை ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கி வருகிறது.

விக்ரம்-I ஆனது லோ எர்த் ஆர்பிட்டிற்கு 480 கிலோகிராம் பேலோடை எடுத்துச் செல்ல முடியும். விக்ரம்-II ஆனது 595 கிலோகிராம் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், விக்ரம்-III 815 கிலோ முதல் 500 கிமீ குறைந்த சாய்வு சுற்றுப்பாதையில் ஏவ முடியும்.

விக்ரம்-I ஏவுகணை வாகனம் கலாம்-100 ராக்கெட் மூலம் இயக்கப்படும், இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிலையான ஃபயர் (fire) சோதனையை வெற்றிகரமாக முடித்தது.  இதுகுறித்து, ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் சிஇஓ(CEO) மற்றும் இணை நிறுவனர் பவன் குமார் சந்தனா, “நாங்கள் தயாரித்துள்ள இந்த ராக்கெட் வானிலைக்கேற்ப, வருகிற 12 ஆம் தேதி  முதல் 16ம் ஆம் தேதிக்குள் விண்ணில் ஏவப்படும்." எனக் கூறியுள்ளார். மேலும், "விக்ரம்-எஸ் ராக்கெட் ஒரு ஒற்றை-நிலை துணை சுற்றுப்பாதை ஏவுகணையாகும், இது மூன்று பேலோடுகளை சுமந்து செல்லும். இதோடு விக்ரம் ஏவுகணை வாகனங்களில் உள்ள பெரும்பாலான தொழில்நுட்பங்களை சோதிக்கவும் சரிபார்க்கவும் உதவும்.” என்று ஸ்கைரூட்டின் தலைமை இயக்க அதிகாரி நாகா பரத் டாக்கா கூறினார்.