Published:Updated:

`அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்துமா?' - ராஜ்நாத் சிங் எச்சரிக்கை பதில்!

மலையரசு

வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுதான் சரியான இடம் என நினைக்கிறேன். அதனால்தான் இங்கு வந்து அஞ்சலி செலுத்துகிறேன்.

Rajnath Singh
Rajnath Singh

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரையும் லடாக்கையும் யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை நிறுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்குச் செல்லும் ரயில் போக்குவரத்தையும் நிறுத்தியுள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

Rajnath Singh
Rajnath Singh

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொக்ரானில் அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசியவர், ``வாஜ்பாய்க்கு மரியாதை செலுத்த இதுதான் சரியான இடம் என நினைக்கிறேன். அதனால்தான் இங்கு வந்து அஞ்சலி செலுத்துகிறேன்" என்றவர், அணு ஆயுதம் குறித்த கேள்விக்கு, ``அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் மாற்றம் வரலாம்.

`கிட்னி பாதிப்பு; 14 ஆபரேஷன்; உடைந்த கால்! - கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்

எதிரி நாடுகள் பயன்படுத்தினால் மட்டுமே பாதுகாப்புக்காக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது என்ற கொள்கையை இந்தியா கையாண்டு வருகிறது. ஆனால் இனி அந்தக் கொள்கையில் மாற்றம் வரலாம். எதிர்காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அணுக் கொள்கையில் மாற்றங்கள் வரலாம்" எனப் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.

`காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கை புரியாத புதிராக உள்ளது. அந்த நாடு இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இருப்பினும் பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இப்படி ஒரு நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவுள்ளது' எனத் தெரிவிக்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.

Rajnath Singh
Rajnath Singh

அதற்கேற்ப அண்மைக்காலமாக, அணு ஆயுதக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. கடந்த மத்திய அமைச்சரவையில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும்போதே இதற்கான முன்னெடுப்பை எடுத்தனர். அதன்பிறகு இந்த விவகாரத்தில் மவுனம் நீடித்தது. புல்வாமா உள்ளிட்ட தாக்குதலைத் தொடர்ந்து அணுக் கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரம்காட்டி வருகிறது.