இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த நிலையில், கடும் பனியிலும் இந்தோ-திபெத் எல்லைக் காவல்படையினர், வடக்கு எல்லையில் 15 ஆயிரம் அடி உயரத்தில், மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் குளிரில் தேசியக்கொடியை ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
உத்தரகாண்ட் மாநிலம், குமான் பகுதியில் கடும் குளிர் நிலவிவருகிறது. அங்கு சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக்கொடியுடன் குடியரசு தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும், உத்தரகாண்டில் 11,000 அடி உயரத்திலுள்ள ஆலி பகுதியில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் குளிரிலும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.