Published:Updated:

ரயில்வே: `ஏசி-க்கு 70 கிலோ, ஸ்லீப்பருக்கு 35 கிலோ; இனி கூடுதல் லக்கேஜூக்கு கட்டணம்!' - IRCTC

இந்திய ரயில்வே

``ரயிலில் முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டுசெல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்." - ஐ.ஆர்.சி.டி.சி

ரயில்வே: `ஏசி-க்கு 70 கிலோ, ஸ்லீப்பருக்கு 35 கிலோ; இனி கூடுதல் லக்கேஜூக்கு கட்டணம்!' - IRCTC

``ரயிலில் முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டுசெல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சாதாரண கட்டணத்தை விட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்." - ஐ.ஆர்.சி.டி.சி

Published:Updated:
இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களின் லக்கேஜ்களுக்கும் முன்பதிவு செய்யவேண்டும் என்பன உட்பட சில புதிய முக்கியக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அதன் விவரங்களை பார்க்கலாம்:-

முதலில், பயணிகள் தாங்கள் கொண்டுவரும் லக்கேஜ் குறித்து, பார்சல் அலுவலகத்தில் முன்பதிவு செய்யவேண்டுமென்று ஐ.ஆர்.சி.டி.சி கூறியிருக்கிறது. ஒருவேளை, முன்பதிவு செய்யாமல் லக்கேஜ் கொண்டுசெல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சாதாரண கட்டணத்தைவிட ஆறு மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில்களில், எத்தனை கிலோவரை லக்கேஜை இலவசமாகக் கொண்டுசெல்லலாம் என்பது குறித்தும் சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

ஐ.ஆர்.சி.டி.சி
ஐ.ஆர்.சி.டி.சி

இந்தப் புதிய கட்டுப்பாட்டின்படி, பயணிகள் பயணிக்கும் வகுப்பை பொறுத்து 35 முதல் 70 கிலோவரை லக்கேஜை இலவசமாகக் கொண்டுசெல்லலாம். அதாவது, ஏசி முதல் வகுப்பு என்றால், 70 கிலோவரை லக்கேஜை இலவசமாக எடுத்துச்செல்லலாம். ஏசி 2-டையர் ஸ்லீப்பர்/முதல் வகுப்புக்கு 50 கிலோ வரையிலும், ஏசி 3-டையர் ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் இலவசமாக லக்கேஜை கொண்டு செல்லலாம். இந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொண்டுசெல்லப்படும் லக்கேஜ்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே லக்கேஜை பார்சல் அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கூட இதனைப் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், பாதுகாப்பாக பேக் செய்யப்படாத லக்கேஜ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் ஐ.ஆர்.சி.டி.சி கூறியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism