Published:Updated:

ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த அதிகாரி சமீர் வான்கடே, மாநில அரசால் வேவு பார்க்கப்பட்டாரா?!

நடிகர் ஷாருக் கான் மகனைக் கைதுசெய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரியை வேவு பார்ப்பதாக வந்த செய்தியை மகாராஷ்டிரா அரசு மறுத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மும்பையில் இம்மாதத் தொடக்கத்தில் நடிகர் ஷாருக் கான் மகன் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் நடந்த போதைப்பொருள் பார்ட்டியில் கலந்துகொண்டார். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியபோது ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட எட்டுப் பேரை கைதுசெய்தனர். இந்தக் கைது பிரச்னையை தேசியவாத காங்கிரஸ் கட்சி அரசியலாக்கியது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே கைது செய்தவர்களில் பாஜக பிரமுகரின் உறவினர் உட்பட மூன்று பேரை விடுவித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருந்தார். சமீர் வான்கடே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் நவாப் மாலிக்கின் மருமகன் சமீர் கான் என்பவரை போதைப்பொருள் வழக்கு ஒன்றில் கைதுசெய்தார்.

திலிப் வல்சே பாட்டீல்
திலிப் வல்சே பாட்டீல்

எனவே, அந்தக் கோபத்தில்தான் சமீர் வான்கடே மீது நவாப் மாலிக் தேவையில்லாத குற்றச்சாட்டைச் சுமத்துவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இந்த நிலையில் புதிய திருப்பமாக ஷாருக் கான் மகன் ஆர்யன் கானை கைதுசெய்வதற்கு தலைமை தாங்கிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மும்பை மண்டல அதிகாரி சமீர் வான்கடே, மும்பை போலீஸார் மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மும்பை போலீஸார் தன்னை வேவு பார்ப்பதாகவும், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் மர்மமான முறையில் சிலர் கலந்துகொண்டதாகவும், தன்னைச் சிலர் பின்தொடர்வதாகவும் சமீர் வான்கடே மகாராஷ்டிரா டி.ஜி.பி-யிடம் முறைப்படி புகார் கூறியிருந்தார்.

போதை நெட்வொர்க்கில் ஆர்யான் சிக்கியது எப்படி? - பதறவைக்கும் பாலிவுட் பார்ட்டிகள்...

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் திலிப் வல்சே பாட்டீல் மறுத்துள்ளார். ``தனது துறையிலிருந்து அது போன்று யாரையும் வேவு பார்க்கும்படி உத்தரவிடவில்லை” என்று அவர் குறிப்பிட்டார். பத்திரிகையாளர்கள் சமீர் வான்கடேயின் குற்றச்சாட்டு குறித்து குறிப்பிட்டு, திலீப் வல்சே பாட்டீலிடம் கேட்டதற்கு இதைத் தெரிவித்தார். அதேசமயம் சமீர் வான்கடேயின் பதவியை மத்திய அரசு மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு