Published:Updated:

`ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க திட்டம்!' - தீவிரமாகக் களமிறங்கும் டாடா?

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

``வேறு சில விமான நிறுவனங்கள் இதை வாங்க முயற்சி செய்து வரும் நிலையில் டாடா சன்ஸ் நிறுவனம் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன."

மத்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனமானது நீண்டகாலமாக நிதி நெருக்கடியில் சிக்கி, இயங்கி வருகிறது. கொரோனா தொடர்பான ஊரடங்காலும் ஏர் இந்தியா தொடர்ந்து பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. முன்னதாக, 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ஏர் இந்தியாவின் மொத்த கடன் ரூபாய் 58,351.93 கோடியாக இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன. இதனால், இந்த நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது. இதை வாங்க பல்வேறு நிறுவனங்களும் போட்டிபோட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், டாடா நிறுவனமானது ஏர் இந்தியாவை வாங்க முயற்சி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

வேறு சில விமான நிறுவனங்கள் இதை வாங்க முயற்சி செய்து வரும் நிலையில் டாடா நிறுவனம் இந்த முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா குழுமத்துக்கு ஏற்கெனவே ஏர் ஏசியாவில் பங்குகள் உள்ளதால் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கி ஏர் ஏசியா நிறுவனத்துடன் இணைக்க டாடா திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சட்ட ஆலோசகர்களுடனும் டாடா குழுமம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோர ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டாடா நிறுவனத்துக்கு ஏர் இந்தியாவை விற்பதற்கு பா.ஜ.க-விலேயே சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுதொடர்பான அதிகாரபூர்வமான முடிவுகள் இன்னும் சில நாள்களில் தெரியும் என்றும் கூறப்படுகிறது.

ஏர் இந்தியா, எல்.ஐ.சி... தொடரும் தனியார் மயம்...  யாருக்கு லாபம்? - விரிவான அலசல்!
அடுத்த கட்டுரைக்கு