Published:Updated:

சம்பளக் குறைப்பால் விமானிகள் வேலை நிறுத்தம் - விமான நிறுவனங்களில் என்னதான் பிரச்னை?

Spice Jet

கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து விமான நிறுவனங்கள் இன்னமும் மீளவில்லை என்பதுதான் உண்மை.

சம்பளக் குறைப்பால் விமானிகள் வேலை நிறுத்தம் - விமான நிறுவனங்களில் என்னதான் பிரச்னை?

கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து விமான நிறுவனங்கள் இன்னமும் மீளவில்லை என்பதுதான் உண்மை.

Published:Updated:
Spice Jet
சம்பளக் குறைப்பு மற்றும் வருங்கால வைப்பு நிதியை டெபாசிட் செய்யத் தவறியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 14) உடல்நிலை சரியில்லை எனக்கூறி சுமார் 43 விமானிகள் விமானத்தை இயக்க மறுத்து வேலை நிறுத்தத்துக்குத் திட்டமிட்டனர். இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விமானங்கள் அனைத்தும் திட்டமிட்டபடி புறப்பட்டுச் சென்றதாகக் கூறியிருக்கிறது.
Spice Jet
Spice Jet

விமான நிறுவனங்களின் பிரச்னை என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவிட்-19 ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து விமான நிறுவனங்கள் இன்னமும் மீளவில்லை என்பதுதான் உண்மை. பெரும் விமான நிறுவனங்களே நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறன. இந்நிலையில் சுமார் 800 விமானிகளை பணியமர்த்தியுள்ள ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கோவிட்-19 பாதிப்புக்கு முன்னால் வழங்கப்பட்ட இருந்த சம்பள அளவிலிருந்து சுமார் 70% சதவிகிதம் சம்பளத்தை பிடித்தம் செய்து தற்போது வழங்கி வருகிறதாம். இதனால் ஸ்பைஸ்ஜெட் பைலட்டுகள் மட்டுமின்றி இண்டிகோ, கோஃபர்ஸ்ட் போன்ற நிறுவனங்களின் பைலட்டுகளும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும் பைலட்களின் வருங்கால வைப்பு நிதி (PF) தொகையையும் நிறுவனம் சரியாக டெபாசிட் செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. 2020-ம் ஆண்டிலிருந்தே வருங்கால வைப்பு நிதியில் குறைபாடுகள் இருப்பதாக விமானிகள் கூறுகின்றனர். விமானிகளை வற்புறுத்தி ராஜினாமா செய்ய வைப்பது மற்றும் தன்னிச்சையான பணிநீக்கங்கள் குறித்தும் கோபம் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது சிவில் ஏவியேஷன் இயக்ககம். ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பலவீனமான நிதிநிலை காரணத்தால் விமானங்களில் பாதுகாப்பு பராமரிப்புகளில் குறைபாடு உள்ளதாகவும் அதை மேம்படுத்தவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விமானங்களில் உதிரிப் பாகங்கள் மற்றும் மெயின்டனன்ஸ் குறைபாடுகள் காரணத்தால் நடுவானில் பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. மே மாதத்தில் ஒரு விபத்தும் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்

இண்டிகோ, கோ-ஃபர்ஸ்ட் நிறுவனங்களின் நிலைமை

இந்த நிறுவனங்களின் விமானிகளும் கடந்த வாரம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 2-ம் தேதி சுமார் 300 இண்டிகோ விமானிகள் செய்த வேலை நிறுத்தத்தில் 55% விமானங்களின் பயணம் தாமதமாக இயங்கின. இதற்கு முன் ஏப்ரல் மாதத்தில் வேலை நிறுத்தம் நடந்தபோது விமானிகள் சிலரை இடைநீக்கம் செய்தது இந்த நிறுவனம்.

மறுபுறம் விமான நிறுவனங்கள் ஊழியர்களின் பிஎஃப் குறித்த புகார்களைத் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றன. ஆனால் மூத்த விமான அதிகாரி ஒருவர் கூறுகையில், ஃபர்ஸ்ட் ஆபீஸர் பணிக்கு 1.3 லட்சம் மற்றும் கமாண்டர் பதவிக்கு 4 லட்சம் சம்பளம் முன்னர் வழங்கப்பட்ட நிலையில் இத்தொகையிலிருந்து மிகவும் குறைவான அளவில் மட்டுமே தற்போது சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.