Published:Updated:

`ஹை-டெக் அலுவலகம் டு தென்னந்தோப்பு..பெங்களூரு டு தேனி!' -கொரோனா அச்சத்தால் இடம்பெயர்ந்த ஐடி நிறுவனம்

IT Company Workers
IT Company Workers

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தம்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றில், செம்மண் தரையில் போர்வை விரித்து, தங்களது அலுவலகத்தை உருவாக்கி அமர்ந்திருக்கிறர்கள் ஐ.டி ஊழியர்கள். அவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனக் கூறியது மட்டுமல்லாமல், Work From Home என்று சொல்லி, வீட்டிலேயே இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

IT Company Workers
IT Company Workers

ஆனால், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு ஐ.டி நிறுவனம் ஒன்று, தங்களது நிறுவனத்தையே தேனி அருகே உள்ள கிராமத்திற்கு இடம் மாற்றியிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தம்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்றில், செம்மண் தரையில் போர்வை விரித்து, தங்களது அலுவலகத்தை உருவாக்கி அமர்ந்திருக்கிறர்கள் ஐ.டி ஊழியர்கள்.

“கொரோனா அச்சம் காரணமாக, ஐ.டி கம்பெனிகள் Work From Home என அறிவித்தார்கள். ஆனால், நாங்கள் Work From Farm என அறிவித்து இங்கே வந்துவிட்டோம். இது என் சொந்த ஊர். இது எங்களுடைய தோட்டம்தான். எனவே, எங்கள் ஊழியர்களை இங்கே அழைத்துவந்துவிட்டேன்” என்றார் அந்த ஐ.டி நிறுவனத்தின் சி.இ.ஓ அரவிந்த்.

Aravindh
Aravindh
4 மணி நேரம் அலுவலகத்திலிருந்து செய்யக்கூடிய வேலையை, இங்கே இரண்டு மணி நேரத்தில் முடித்துவிடுகிறேன்
ஐ.டி நிறுவன ஊழியர்

"உங்கள் நிறுவனம் என்னென்ன வேலைகளைச் செய்யும். எத்தனை பேர் உங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்கள்?" எனக் கேட்டோம்.

“எங்களது நிறுவனம் உருவாக்கப்பட்டு 4 வருடங்கள் ஆகின்றன. இந்தியாவின் முதல் Eco Friendly செயலியை உருவாக்கிய நிறுவனம். ’இன்ஸ்டா க்ளீன்’ (InstaClean) என்பது அதன் பெயர். இதன் மூலம், தேவையற்ற மின்னஞ்சல்கள் நமது மெயில் ஐ.டி’க்கு வராமல் தடுக்க முடியும். இதற்கும் சுற்றுச்சூழலுக்கு என்ன சம்பந்தம் என நீங்கள் கேட்கலாம். ஒரு இ-மெயில் மூலமாக 5 கிராம் அளவிற்கு மனிதன் CO2’ஐ (கார்பன் - டை - ஆக்சைடு) வெளியிடுகிறான். இணையம் செயல்படும் போதும், அதன் மின்னணுப் பொருள்கள் வேலை செய்யும் போதும் என ஒரு மின்னஞ்சலுக்கு 5 கிராம் அளவிற்கு CO2 வெளியிடப்படுகிறது.

Pavithran
Pavithran

இதே, ஒரு மனிதன் தனது வாழ்நாளில், 18 டன் அளவிலான CO2’ஐ வெளியிடுகிறான். இப்படி வெளியிடப்படும் CO2 காரணமாக புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. இதைத் தடுக்கும் பொருட்டு, தேவையற்ற இ-மெயில்களை உங்களது மெயில் ஐ.டி’க்கு வர விடாமல் தடுப்பதே எங்கள் செயலியின் நோக்கம். இதன் வாயிலாக, முடிந்தவரை, CO2’ஐ தடுக்க முடியும். இந்தச் செயலிக்கு மக்களிடையே நிறைய வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 6 லட்சத்து 38 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். ப்ளே ஸ்டோர் மற்றும் ஐ.ஓ.எஸ்’களில் கிடைக்கும். இலவசமான செயலிதான். எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 20 பேர் வேலை பார்க்கிறார்கள். அதில் 8 பேர் மட்டுமே தற்போது இங்கே வந்துள்ளனர். மீதி நபர்கள் விரைவில் வருவார்கள். நாங்கள் இங்கே வந்து பத்து நாள்களாகின்றன” என்றார்.

Insta Clean செயலியை டவுன்லோடு செய்து, மரம் நட விருப்பம் தெரிவித்தால், அதை இவர்களே செய்து முடிப்பார்கள். இந்த யோசனையை, இவர்கள் தென்னந்தோப்பில் அமர்ந்துகொண்டு யோசித்துதான் செயல்படுத்தியுள்ளனர்.

”பெங்களூருவில் இருக்கும்போது ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு, நான்கு சுவருக்கு உள்ளே வேலை செய்து பழகிவிட்டோம். ஆனால், இங்கே தென்னந்தோப்பில் அமர்ந்து வேலை செய்வது நன்றாக இருக்கிறது. நினைத்த நேரம் இளநீர் குடிக்கலாம். வேலை நேரம் போக, மற்ற நேரங்களில், ஆற்றில் குளிக்கலாம். மலை அருகே நடந்து செல்லலாம். இந்த வசதி வேறு எங்குமே கிடைக்காது. மேலும் இயற்கையான உணவுகள் கிடைக்கிறது. ஹோட்டல் உணவுகள்போல இல்லாமல், களி, கூழ் எல்லாம் கிடைப்பதால், ஆரோக்கியமான சாப்பாட்டோடு அமைதியான சூழலில் வேலை பார்க்க நன்றாக இருக்கிறது.” என்றார் பவித்ரன்.

Kanishgan
Kanishgan

கனிஷ்கன் என்பவர் பேசுகையில், “நான் இலங்கை தமிழர். பெங்களூருவில், அலுவலகத்தில் வேலை செய்யும்போது இப்படியான நல்ல சூழல் இல்லை. என்னுடைய வேலையே கிரியேட்டிவாக யோசிக்க வேண்டும் என்பதுதான். அதை இச்சூழலில் எளிமையாகச் செய்யமுடிகிறது. 4 மணி நேரம் அலுவலகத்திலிருந்து செய்யக்கூடிய வேலையை, இங்கே இரண்டு மணி நேரத்தில் முடித்துவிடுகிறேன்” என்றார் மகிழ்ச்சியோடு.

IT Company Workers
IT Company Workers

நாள் ஒன்றிற்கான 24 மணி நேரத்தை, 7-8-9 மணிகளாக பிரித்துள்ளனர். அதாவது 7 மணி நேரத்தில் வேலை, எட்டு மணி நேரம் தூக்கம், 9 மணி நேரம் இயற்கையை ரசித்து ஊர் சுற்றுவதற்கு. இது மட்டுமல்லாமல், மரம் நட விருப்பம் இருப்பவர்கள், Insta Clean செயலியை டவுன்லோடு செய்து, மரம் நட விருப்பம் தெரிவித்தால், அதை இவர்களே செய்து முடிப்பார்கள். இந்த யோசனையை, இவர்கள் தென்னந்தோப்பில் அமர்ந்துகொண்டு யோசித்துதான் செயல்படுத்தியுள்ளனர். கடந்த ஐந்து நாள்களில், சுமார் 3,000 பேர், மரம் நட விருப்பம் தெரிவித்துள்ளனர். தேனி மாதிரியான இயற்கைச் சூழல் மிகுந்த இடத்தில் ஐ.டி கம்பெனியைத் தென்னந்தோப்பில் சாத்தியமாக்கியவர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு