Published:Updated:

`ஆமாம்...மிகப் பெரிய தவறுதான்!' - சொந்த ஹெலிகாப்டரை வீழ்த்தியதை ஒப்புக்கொண்ட விமானப் படைத் தளபதி

`இந்தியாவின் Mi17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டரை இந்திய ஏவுகணைதான் தவறுதலாகச் சுட்டுவிட்டது’ என ஒப்புக்கொண்டுள்ளார் விமானப்படை தளபதி

விமானப் படை தளபதி
விமானப் படை தளபதி ( ANI )

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான Mi17 V5 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று, கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்டது. ஹெலிகாப்டர் புட்காம் நகர் அருகே சென்றுகொண்டிருக்கும்போது திடீரென வானத்தில் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியது. பொதுமக்கள் உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Mi-17 chopper broken
Mi-17 chopper broken

இந்த விமான விபத்துக்கு முந்தைய நாள்தான், இந்திய விமானப்படை பால்கோட்டில் நுழைந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பியது. இதனால் இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குப் பாகிஸ்தானின் சதித் திட்டம் காரணமாக இருக்குமோ எனச் சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த விசாரணையில் இந்திய ராணுவத்தின் வான்வெளி பாதுகாப்பு ஏவுகணையே Mi17 V5 ஹெலிகாப்டரை தவறுதலாகச் சுட்டு வீழ்த்தியது என்று கூறப்பட்டது. ஆனால், இந்தக் கருத்தை முதலில் மறுத்த இந்திய விமானப்படை, பின்னர் வெளிநாட்டு ஹெலிகாப்டர் என நினைத்துச் சுட்டதாகக் கூறியது.

பால்கோட்டில் மீண்டும் தீவிரவாதப் பயிற்சி! - இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டம்?

இந்நிலையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான Mi17 V5 ஹெலிகாப்டரை இந்திய விமானப்படைதான் சுட்டு வீழ்த்தியது என விமானப்படை தளபதி ராகேஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்திய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகப்பெரும் தவறு. அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்தியாவின் ஏவுகணைதான் ஹெலிகாப்டரை தாக்கியது.

Mi-17 chopper broken
Mi-17 chopper broken

இதுதொடர்பான விசாரணை கடந்த வாரம்தான் நிறைவடைந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும்காலங்களில் இதுபோன்ற தவறு நடக்காமல் இந்திய விமானப்படை எச்சரிக்கையுடன் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Vikatan