இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ITBP), போரில் பயன்படுத்தும் நாய்கள் NTCD (National Training Centre for Dogs) என்ற அமைப்பின் மூலம் பயிற்சி தந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் இருக்கும் மாலினோயிஸ் ஹீரோ K9 என்ற இனத்தைச் சேர்ந்த ஜூலி என்ற நாய் போரில் பயன்படுத்தப்படும் முக்கியமான வகையைச் சேர்ந்ததாகும். இந்த இனத்தைச் சேர்ந்த நாய்களைதான் நேட்டோ படைகள் போர்களுக்கு பயன்படுத்தி வருகின்றன. தற்போது ITBP-ன் இந்த ஜூலி என்ற நாய் NAK என்ற திட்டத்தில் 8 ஆரோக்கியமான குட்டிகளைப் பெற்றெடுத்துள்ளது.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நாய்களின் எதிர்காலம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையே நடத்தி வருகின்றனர். அதில் சிலர் ‘இந்த நாய்களை போர்களில் பயன்படுத்த வேண்டும் என்று நீங்களாக முடிவு செய்யக்கூடாது, போராளியாக இருக்க வேண்டுமா இல்லையா என்று அதுதான் முடிவு செய்யவேண்டும்’ என்றும் ’ஒருவேளை அவர்களில் சிலர் மருத்துவர் அல்லது பொறியியலாளராக கூட ஆக விரும்பலாம் யாருக்குத் தெரியும்?’ என வேடிக்கையாக பதில்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
